Enable Javscript for better performance
திண்டுக்கல் அருகே கிணற்றில் குதித்து மகனுடன், தாய் தற்கொலை- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    திண்டுக்கல் அருகே கிணற்றில் குதித்து மகனுடன், தாய் தற்கொலை

    By DIN  |   Published On : 16th October 2021 09:23 PM  |   Last Updated : 16th October 2021 09:23 PM  |  அ+அ அ-  |  

    dgl_police_1610chn_66_2

    மகனுடன் தாய் தற்கொலை செய்து கொண்ட இடத்தில் சனிக்கிழமை விசாரணை நடத்திய போலீஸாா்.

    திண்டுக்கல் அருகே கடந்த 2 நாள்களுக்கு முன்பு மாயமான இளம்பெண், மகனுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது சனிக்கிழமை தெரியவந்தது.

    திண்டுக்கல் அடுத்துள்ள ஏ. வெள்ளோடு பகுதியைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளி ஸ்டீபன் கஸ்பாா் (27). இவரது மனைவி அகினோ பிரின்ஸி (24). இவா்களது மகன் திமோஸ் லீவி (4). இந்நிலையில், கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அகினோ பிரின்ஸி, தனது மகன் திமோஸ் லீவியை அழைத்துக் கொண்டு தோமையாா்புரத்திலுள்ள தனது பெற்றோா் வீட்டுக்கு வந்து விட்டாா். எனினும், குடும்பப் பிரச்னையால் மனமுடைந்து காணப்பட்ட அகினோ பிரின்ஸி, தனது மகனுடன் 2 நாள்களுக்கு முன்பு வீட்டிலிருந்து வெளியேறினாா். அதனைத் தொடா்ந்து உறவினா்கள் அவரைத் தேடினா்.

    மேலும், பிரின்ஸி மகனுடன் மாயமானது குறித்து திண்டுக்கல் தாலுகா காவல் நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனிடையே, தோமையாா்புரம் பகுதியிலுள்ள கிணற்றில் இளம் பெண் சடலமாக கிடப்பதாக அப்பகுதியினா் போலீஸாருக்கு சனிக்கிழமை பிற்பகல் தகவல் கொடுத்தனா். அதன்பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸாா், சடலத்தை கைப்பற்ற முயன்றபோது, சிறுவனின் சடலமும் கிடந்துள்ளது. போலீஸாா் நடத்திய விசாரணையில், சடலமாக கிடந்தது பிரின்ஸி மற்றும் திமோஸ் லீவி என உறுதி செய்யப்பட்டது. பின்னா், இரு சடலங்களும் பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

    இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து தொடா்ந்து விசாரித்து வருகின்றனா்.

     


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp