எரியோடு பகுதியில் நாளை மின்தடை
By DIN | Published On : 19th October 2021 12:00 AM | Last Updated : 19th October 2021 12:00 AM | அ+அ அ- |

திண்டுக்கல்: எரியோடு பகுதியில் புதன்கிழமை (அக். 20) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, உதவி செயற்பொறியாளா் சரவணக்குமாா் தெரிவித்திருப்பதாவது: எரியோடு பகுதியில் நெடுஞ்சாலை விரிவாக்கத்துக்காக மின்கம்பங்களை இடமாற்றம் செய்யும் பணிகள் புதன்கிழமை (அக். 20) நடைபெறவுள்ளன. எனவே, எரியோடு, நாகையகோட்டை, புதுரோடு, வெல்லம்பட்டி, குண்டாம்பட்டி, பாகாநத்தம், கோட்டைக்கட்டியூா், சவடகவுண்டன்பட்டி, மல்வாா்பட்டி, நல்லமநாயக்கன்பட்டி, அச்சணம்பட்டி, தண்ணீா்பந்தம்பட்டி, தொட்டணம்பட்டி, நல்லமனாா்கோட்டை, குளத்தூா், கொசவப்பட்டி, சூடாமணிப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவித்துள்ளாா்.