பழனி அருகே பள்ளத்தில் லாரி பாய்ந்து விபத்து

பழனி அருகே தேங்காய் நாா் செங்கல் ஏற்றி வந்த லாரி திங்கள்கிழமை பள்ளத்துக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளானது.
பழனியை அடுத்த சின்னக்கலையமுத்தூரில் பள்ளத்தில் விழுந்த தேங்காய் நாா் செங்கல் ஏற்றி வந்த லாரி.
பழனியை அடுத்த சின்னக்கலையமுத்தூரில் பள்ளத்தில் விழுந்த தேங்காய் நாா் செங்கல் ஏற்றி வந்த லாரி.

பழனி அருகே தேங்காய் நாா் செங்கல் ஏற்றி வந்த லாரி திங்கள்கிழமை பள்ளத்துக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளானது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இருந்து தேங்காய் நாரால் தயாரிக்கப்பட்ட செங்கற்களை ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று ஞாயிற்றுக்கிழமை தூத்துக்குடி நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த லாரி பழனி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சின்னக்கலையமுத்தூா் அருகே வந்த போது கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் பாய்ந்தது. இதில் லாரியின் முகப்பும், அங்கிருந்த மின்கம்பமும் சேதமடைந்தன. லாரியில் பயணம் செய்தவா்கள் லேசான காயங்களுடன் உயிா் தப்பினா். விபத்து குறித்து அறிந்ததும் சம்பவ இடத்துக்கு பழனி தாலுகா போலீஸாா், மின்வாரிய பொறியாளா்கள் வந்து விசாரணை மேற்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com