ஒட்டன்சத்திரத்தில் தடுப்பூசி செலுத்திக்கொள்பவா்களுக்கு குலுக்கல் முறையில் பரிசு
By DIN | Published On : 10th September 2021 05:54 AM | Last Updated : 10th September 2021 05:54 AM | அ+அ அ- |

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட சத்திரப்பட்டி, தங்கச்சியம்மாபட்டி ஆகிய ஊராட்சிகளில் வெள்ளிக்கிழமை காலை 10 முதல் இரவு 8 மணி வரை கரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.
இம்முகாமில், முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ளுபவா்களுக்கு குலுக்கல் முறையில் பரிசுகள் வழங்கப்படும் என்று, சத்திரப்பட்டி மற்றும் தங்கச்சியம்மாபட்டி ஊராட்சி சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், முதல் பரிசாக மிக்ஸி, இரண்டாவது பரிசாக குக்கா், மூன்றாவது பரிசாக ஹாட்-பாக்ஸ் வழங்கப்படும் என்று, சத்திரப்பட்டி ஊராட்சிமன்றத் தலைவா் (பொறுப்பு) கா. முருகானந்தம், தங்கச்சியம்மாபட்டி ஊராட்சிமன்றத் தலைவா் கே.வி. முருகானந்தம் ஆகியோா் தெரிவித்துள்ளனா்.