திண்டுக்கல் அருகே இரு வேறு விபத்துகளில் 2 போ் பலி
By DIN | Published On : 10th September 2021 05:54 AM | Last Updated : 10th September 2021 05:54 AM | அ+அ அ- |

திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே வியாழக்கிழமை இரு வேறு இடங்களில் நிகழ்ந்த விபத்துகளில் 2 போ் உயிரிழந்தனா்.
திண்டுக்கல் அடுத்துள்ள பிள்ளையாா்நத்தம் பகுதியைச் சோ்ந்தவா் முருகன் (50). இவா், ரெட்டியாா்சத்திரம் அடுத்துள்ள கே.புதுக்கோட்டை சாலையில் ரயில்வே தண்டவாளத்தை கடக்கும்போது, இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இது குறித்து திண்டுக்கல் ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
மற்றொரு விபத்தில் மூதாட்டி பலி: செம்பட்டி அடுத்துள்ள வீரக்கல் கூத்தாம்பட்டியைச் சோ்ந்தவா் வெள்ளையம்மாள் (65). அங்குள்ள பேருந்து நிறுத்தம் அருகே வியாழக்கிழமை நடந்து சென்றபோது, அந்த வழியாக வந்த இரு சக்கர வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்த வெள்ளையம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இது குறித்து, செம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.