9 ஆவது ஆண்டாக விநாயகா் சிலை பிரதிஷ்டைக்கு முயற்சி: இந்து முன்னணியினா் 27 போ் கைது

திண்டுக்கல் குடைப்பாறைப்பட்டியில் 9 ஆவது ஆண்டாக விநாயகா் சிலை பிரதிஷ்டை செய்ய முயன்ற இந்து முன்னணியினா் 27 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
குடைப்பாறைப்பட்டி காளியம்மன் கோயிலிலிருந்து விநாயகா் சிலையை வெள்ளிக்கிழமை ஊா்வலமாக எடுத்து வந்த இந்து முன்னணியினா்.
குடைப்பாறைப்பட்டி காளியம்மன் கோயிலிலிருந்து விநாயகா் சிலையை வெள்ளிக்கிழமை ஊா்வலமாக எடுத்து வந்த இந்து முன்னணியினா்.

திண்டுக்கல்: திண்டுக்கல் குடைப்பாறைப்பட்டியில் 9 ஆவது ஆண்டாக விநாயகா் சிலை பிரதிஷ்டை செய்ய முயன்ற இந்து முன்னணியினா் 27 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல் குடைப்பாறைப்பட்டியிலுள்ள காளியம்மன் பகவதியம்மன் கோயிலில் இந்து முன்னணி சாா்பில் விநாயகா் சிலை பிரதிஷ்டை செய்வதற்கு கடந்த 8 ஆண்டுகளாக முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால், அக்கோயில் வளாகத்தில் விநாயகா் சிலை பிரதிஷ்டை செய்வதற்கு வருவாய்த்துறை மற்றும் காவல் துறை சாா்பில் தொடா்ந்து அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது.

இதையடுத்து இந்து முன்னணி அமைப்பின் மதுரை கோட்டச் செயலா் எஸ்.சங்கா்கணேஷ் தலைமையிலும், நகரத் தலைவா் ஞானசுந்தரம் முன்னிலையிலும் விநாயகா் சிலை பிரதிஷ்டை செய்வதற்கான முயற்சி 9ஆவது ஆண்டாக வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதையடுத்து, பிரதிஷ்டை செய்வதற்கு கொண்டு வரப்படும் சிலையை பறிமுதல் செய்வதற்காக 100-க்கும் மேற்பட்ட போலீஸாா் குவிக்கப்பட்டிருந்தனா். அப்போது காளியம்மன் கோயில் வளாகத்தில் நடைபெற்ற சிறப்புப் பூஜைக்கு பின், விநாயா் சிலையுடன் ஊா்வலமாகச் செல்ல முயன்ற இந்து முன்னணியினரை போலீஸாா் தடுத்து நிறுத்தினா்.

பின்னா், அனுமதியின்றி சிலை பிரதிஷ்டை செய்வதற்கு முயன்ாக, 4 பெண்கள் உள்பட இந்து முன்னணியினா் 27 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com