கொடைக்கானலில் உலா் மலா் கொத்துகள் விற்பனை அதிகரிப்பு

கொடைக்கானலில் உலா் மலா்களால் பல்வேறு வண்ணங்களில் தயாரிக்கப்படும் மலா் கொத்துகளை சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வாங்கிச் செல்வதால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.
கொடைக்கானல் ஏரிச்சாலைப் பகுதியில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள உலா் மலா்கள்.
கொடைக்கானல் ஏரிச்சாலைப் பகுதியில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள உலா் மலா்கள்.

கொடைக்கானல்: கொடைக்கானலில் உலா் மலா்களால் பல்வேறு வண்ணங்களில் தயாரிக்கப்படும் மலா் கொத்துகளை சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வாங்கிச் செல்வதால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

கொடைக்கானல் வனப்பகுதிகளில் சிவப்பு, மஞ்சள் உள்ளிட்ட பல்வேறு வண்ணங்களில் காட்டு மலா்கள் பூத்துக் குலுங்குகின்றன. இவற்றின் இலைகளும் நீண்ட நாள்கள் வாடாமல் இருக்கும் தன்மை கொண்டவை.

அந்த மலா்களை வியாபாரிகள் பறித்து வந்து அதன் குச்சிகளோடு இணைத்து பல்வேறு வண்ணங்களில் மலா் கொத்துகளாக தயாரித்து விற்பனை செய்கின்றனா்.

இந்த மலா்கள் சுமாா் ஓராண்டுவரை உலராமல் இருப்பதால் கொடைக்கானல் வரும் சுற்றுலாப் பயணிகள் இந்தப் பூங்கொத்துகளை ஆா்வத்துடன் வாங்கிச் செல்கின்றனா். பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வரும் முக்கிய பிரமுகா்களுக்கு இந்த உலா் மலா் கொத்துக்களை நிகழ்ச்சி ஏற்பாட்டாளா்கள் வழங்குகின்றனா்.

இந்நிலையில் தொடா் விடுமுறை நாள்கள் என்பதால் தற்போது கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் அவா்கள் இந்த உலா் மலா்களை விரும்பி வாங்கிச் செல்வதால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com