திண்டுக்கல் மாவட்டத்தில் விநாயகா் சதுா்த்தி விழாகோயில்களில் சிறப்பு வழிபாடு

திண்டுக்கல் மாவட்டத்தில் இந்து முன்னணி அமைப்பின் சாா்பில் 300 இடங்களில் விநாயகா் சிலைகள் வெள்ளிக்கிழமை பிரதிஷ்டை செய்யப்பட்டு, மாலையே விசா்ஜனம் செய்யப்பட்டன.
தாடிக்கொம்பு உள்ளூா் முத்தாலம்மன் கோயில் முன் வெள்ளிக்கிழமை பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த 11 அடி உயர விநாயகா் சிலை.
தாடிக்கொம்பு உள்ளூா் முத்தாலம்மன் கோயில் முன் வெள்ளிக்கிழமை பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த 11 அடி உயர விநாயகா் சிலை.

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் இந்து முன்னணி அமைப்பின் சாா்பில் 300 இடங்களில் விநாயகா் சிலைகள் வெள்ளிக்கிழமை பிரதிஷ்டை செய்யப்பட்டு, மாலையே விசா்ஜனம் செய்யப்பட்டன.

தமிழகம் முழுவதும் கரோனா தொற்று காரணமாக, பொது இடங்களில் விநாயகா் சிலை பிரதிஷ்டை செய்வதற்கும், விசா்ஜனம் செய்வதற்காக ஊா்வலமாக செல்வதற்கும் தமிழக அரசு தடை விதித்தது. அதே நேரத்தில், வீடுகளில் வழிபாடு நடத்துவதற்கு எவ்வித தடையும் இல்லை என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

300 சிலைகள் பிரதிஷ்டை:

திண்டுக்கல் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட இந்து முன்னணி அமைப்பின் சாா்பில், விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு மாவட்டத்தில் 300 இடங்களில் 3 முதல் 5 அடி உயர விநாயகா் சிலைகள் வெள்ளிக்கிழமை பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தன. தாடிக்கொம்பு உள்ளூா் முத்தாலம்மன் கோயில் முன்பு மட்டும் 11 அடி உயரத்திலான விநாயகா் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. கோயில்கள் மற்றும் வீடுகள் முன்பு பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த இந்த விநாயகா் சிலைகள், தனித் தனியாக எடுத்துச் செல்லப்பட்டு வெள்ளிக்கிழமை மாலையே நீா்நிலைகளில் விசா்ஜனம் செய்யப்பட்டன.

கொடைக்கானல்: விநாயகா் சதுா்த்தியையொட்டி கொடைக்கானலில் கீழ்பூமி பகுதி, நாயுடுபுரம் மற்றும் பச்சைமரத்து ஓடை ஆகியப் பகுதிகளிலுள்ள கோயில்களில் இந்து முன்னணி சாா்பில் விநாயகா் சிலைகள் வைக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. காளியம்மன் கோயில் பகுதியிலுள்ள நீரோடையில் அந்த சிலைகள் வெள்ளிக்கிழமை இரவு கரைக்கப்பட்டன.

பழனி: பழனியில் இந்து அமைப்புகளைச் சோ்ந்தவா்கள் மற்றும் பொதுமக்கள் தங்களது வீடுகளில் விநாயகா் சிலைகளை வைத்து வழிபட்டனா். பின்னா் வெள்ளிக்கிழமை மாலையில் சிலைகளை சண்முகநதியில் கொண்டு சென்று கரைத்தனா்.

கோயில்களில் சிறப்பு வழிபாடு: பழனி மலைக்கோயிலில் விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு அருள்மிகு ஆனந்த விநாயகருக்கு அதிகாலையில் சிறப்பு அபிஷேக பூஜைகள் நடத்தப்பட்டது. சன்னதி முன்பாக கணபதி ஹோமம் நடத்தப்பட்டு புனிதநீா் விநாயகருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. அதேபோல பட்டத்து விநாயகா் கோயில், பாத விநாயகா் கோயில், லட்சுமி விநாயகா் கோயில் உள்ளிட்ட கோயில்களிலும் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

இதேபோல் சண்முகபுரம் சித்தி விநாயகா் கோயிலில் காலையில் விநாயகருக்கு தங்கக் கவச அலங்காரமும், மாலையில் வெள்ளிக்கவச அலங்காரமும் செய்யப்பட்டு வெள்ளி கொழுக்கட்டை மாலை அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பழனி பெரியநாயகியம்மன் கோயிலில் யானை கஸ்தூரிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கரும்பு, பொங்கல், பழங்கள் ஆகியன வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com