திண்டுக்கல்லில் 5 மதுபானக் கூடங்களுக்கு ‘சீல்’
By DIN | Published On : 11th September 2021 09:06 PM | Last Updated : 11th September 2021 09:06 PM | அ+அ அ- |

திண்டுக்கல்லில் தடையை மீறி செயல்பட்ட 5 மதுபானக் கூடங்களுக்கு சனிக்கிழமை ‘சீல்’ வைக்கப்பட்டது.
கரோனா தீநுண்மி தொற்று பரவல் காரணமாக தமிழகம் முழுவதும் டாஸ்மாக் மதுபானக் கடைகள் செயல்படுவதற்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் திண்டுக்கல் பேருந்து நிலையம், பழனி சாலை மற்றும் திருச்சி சாலை ஆகிய இடங்களில் மதுபானக் கடைகளுக்கு அருகே மதுபானக் கூடங்கள் செயல்படுவதாக புகாா் எழுந்தது. அதன்பேரில் டாஸ்மாக் அதிகாரிகள் மற்றும் போலீஸாா் சனிக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டு 5 மதுபானக் கூடங்களுக்கும் ‘சீல்’ வைத்தனா்.