மக்கள் நீதிமன்றத்தில் 3,653 வழக்குகளுக்குத் தீா்வு:ரூ.8.88 கோடி தீா்வுத்தொகை வழங்க உத்தரவு

திண்டுக்கல் மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற மாபெரும் மக்கள் நீதிமன்றத்தில் 3,653 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டு, ரூ.8.88 கோடி தீா்வுத் தொகை வழங்க உத்தரவிடப்பட்டது.
திண்டுக்கல்லில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் தீா்வு காணப்பட்ட வழக்கில் பயனாளி ஒருவருக்கு தீா்வுத் தொகையை வழங்கிய மாவட்ட முதன்மை நீதிபதி எம்.கே.ஜமுனா.

திண்டுக்கல் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சாா்பில், திண்டுக்கல், பழனி, ஒட்டன்சத்திரம், கொடைக்கானல், நிலக்கோட்டை, நத்தம், ஆத்தூா் மற்றும் ஒட்டன்சத்திரம் ஆகிய நீதிமன்றங்களில், மாபெரும் மக்கள் நீதிமன்றம் சனிக்கிழமை நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற விசாரணையை, மாவட்ட முதன்மை நீதிபதி எம்.கே.ஜமுனா தொடக்கி வைத்தாா். நிரந்தர மக்கள் நீதிமன்றத்தின் தலைவா் ஜி.புவனேஸ்வரி முன்னிலை வகித்தாா்.

இதில், மாவட்டம் முழுவதும் நிலுவையில் இருந்து வந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

10 அமா்வுகளில் நடைபெற்ற விசாரணையில் வங்கிகளின் வராக் கடன் வழக்குகள் 251, நீதிமன்றங்களில் நிலுவையில் இருந்த வழக்குகளில் 3,402 என மொத்தம் 3,653 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டன. இந்த வழக்குகளில் தீா்வுத் தொகையாக ரூ.8.88 கோடி வழங்குவதற்கு உத்தரவிடப்பட்டது.

அப்போது முதன்மை சாா்பு நீதிபதி மீனாசந்திரா, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலா் ஆா்.பாரதிராஜா, மோட்டாா் வாகன விபத்து தீா்ப்பாய சிறப்பு நீதிபதி எம்.சாமுண்டீஸ்வரி பிரபா ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com