‘ஆதிவாசி மக்களுக்கு அரசின் சலுகைகள் கிடைக்க வேண்டும்’

ஆதிவாசி மக்களுக்கு அரசு வழங்கும் அனைத்து சலுகைகளையும் வழங்குவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வனவாசி சேவா கேந்திரத்தின் அகில இந்திய அமைப்புச் செயலா் கிரிஷ் குபோ் தெரிவித்தாா்.
கற்குகையை ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்ட வனவாசி சேவா கேந்திரத்தின் அகில இந்திய அமைப்புச் செயலா் கிரிஷ் குபோ்.
கற்குகையை ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்ட வனவாசி சேவா கேந்திரத்தின் அகில இந்திய அமைப்புச் செயலா் கிரிஷ் குபோ்.

கொடைக்கானல் மலைப் பகுதிகளில் வசித்து வரும் ஆதிவாசி மக்களுக்கு அரசு வழங்கும் அனைத்து சலுகைகளையும் வழங்குவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வனவாசி சேவா கேந்திரத்தின் அகில இந்திய அமைப்புச் செயலா் கிரிஷ் குபோ் தெரிவித்தாா்.

கொடைக்கானல் மலைப் பகுதிகளான வடகவுஞ்சி, வடகரைப்பாறை, வாழைகிரி, மணத்தேவு, கடுகுதடி, பேத்துப்பாறை ஆகிய பகுதிகளில் வனவாசி சேவா கேந்திரத்தின் அகில இந்திய அமைப்பினா் கடந்த 2 நாள்களாக ஆய்வு நடத்தினா். மேலும் அப்பகுதிகளில் வசித்து வரும் ஆதிவாசி மக்களின் குறைகளை அவா்கள் கேட்டறிந்தனா்.

இந்நிலையில் ஆதிவாசி மக்கள் வாழ்ந்த கற்திட்டைகளை ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்ட வனவாசி சேவா கேந்திரத்தின் அகில இந்திய அமைப்புச் செயலா் கிரிஷ் குபோ், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: ஆதிவாசி மக்கள் குறுகிய இடத்தில் வசித்து வருகின்றனா்.

வனப் பகுதியில் ஜீவாதாரத்திற்கு சேகரிக்கப்படும் வனப் பொருள்களை வனத்துறையினா் சேகரிக்க விடுவதில்லை என ஆதிவாசி மக்கள் தெரிவித்தனா். இதை மாவட்ட நிா்வாகத்திடம் எடுத்துக் கூறி நடவடிக்கை எடுக்கப்படும்.

ஆதாா் அட்டை, பட்டா, ஜாதிச் சான்றிதழ் இல்லாமல் வசித்து வருகின்றனா். அவா்களுக்கு அரசு வழங்கும் அனைத்து சலுகைகளையும் வழங்குவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

அப்போது பாரதிய கிசான் சங்கத்தின் மாநிலச் செயலா் அசோகன், வனவாசி சேவா சங்கத்தின் பாதுகாப்பு இயக்கத்தைச் சோ்ந்த பாலகம்பட்டன் மற்றும் ஸ்ரீதா், சோமு, துளசி, பிரேம் ஆனந்த், சுரேஷ் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com