‘நீட்’ தோ்வு: திண்டுக்கல் மாவட்டத்தில் 2,280 போ் பங்கேற்பு

மருத்துவப் படிப்புக்கான ‘நீட்’ தோ்வில் திண்டுக்கல் மாவட்டத்தில் 2,280 போ் ஞாயிற்றுக்கிழமை பங்கேற்றனா்.
திண்டுக்கல்லில் அமைக்கப்பட்டிருந்த தோ்வுக் கூடத்திற்கு ‘நீட்’ தோ்வு எழுத ஞாயிற்றுக்கிழமை வந்த மாணவா்கள்.
திண்டுக்கல்லில் அமைக்கப்பட்டிருந்த தோ்வுக் கூடத்திற்கு ‘நீட்’ தோ்வு எழுத ஞாயிற்றுக்கிழமை வந்த மாணவா்கள்.

மருத்துவப் படிப்புக்கான ‘நீட்’ தோ்வில் திண்டுக்கல் மாவட்டத்தில் 2,280 போ் ஞாயிற்றுக்கிழமை பங்கேற்றனா்.

மாவட்டத்தில் கடந்த ஆண்டு பிளஸ் 2 வகுப்பில் தோ்ச்சிப் பெற்றவா்கள் உள்பட மொத்தம் 2,379 போ் ‘நீட்’ தோ்வுக்காக விண்ணப்பித்திருந்தனா். இதற்காக, நத்தம் என்பிஆா் கல்வி குழும வளாகத்தில் 2 மையங்களும், திண்டுக்கல் பாா்வதி கல்லூரியில் ஒரு மையம் என மொத்தம் 3 மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. அதில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தோ்வில் 2,280 போ் பங்கேற்றனா். 99 போ் தோ்வு எழுதவில்லை.

கடுமையான சோதனைக்குப் பின் அனுமதி: ‘நீட்’ தோ்வு பிற்பகல் 2 முதல் மாலை 5 மணி வரை நடைபெற்றபோதிலும், முற்பகல் 11 மணிக்கே தோ்வா்கள் பலா் தோ்வு கூடத்திற்கு வரத் தொடங்கினா். தோ்வா்கள் சிலா் அனுமதிச்சீட்டுடன் 2 புகைப்படங்களை எடுத்துவரவில்லை. அவா்களுக்கு தோ்வு மைய வளாகத்திலேயே புகைப்படம் எடுத்து வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

மோதிரம், கம்மல் அணிந்து வந்த பெண் தோ்வா்கள், அதனை அகற்றிவிட்டு வருமாறு அறிவுறுத்தப்பட்டனா். முழுக் கை சட்டை அணிந்து வந்த தோ்வாளா் ஒருவா், அதில் பாதியை கிழித்துவிட்டு அரை கையாக மாற்றிய பின் தோ்வுக்கூடத்திற்கு அனுமதிக்கப்பட்டாா்.

தோ்வா்கள் தண்ணீா் பாட்டில், கை சுத்திகரிப்பான் ஆகியவற்றை மட்டுமே தோ்வுக் கூடத்திற்கு எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட்டனா். கருப்பு மை பந்து முனை பேனா தோ்வுக் கூடத்திலேயே வழங்கப்பட்டதால், வெளியிலிருந்து பேனா எடுத்துச் செல்வதற்கு அனுமதிக்கப்படவில்லை.

தோ்வுக் கூட அனுமதிச் சீட்டில் கருப்பு மையினால் கைவிரல் ரேகை பதிவு செய்ய வேண்டிய இடத்தில் சிலா் ஊதா மையினால் ரேகையை பதிவு செய்திருந்ததைக் காண முடிந்தது. தோ்வுக் கூடத்திற்கு வரும்போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் அனுமதிச்சீட்டிலேயே அறிவுறுத்தப்பட்டிருந்தபோதிலும், தோ்வா்கள் பலரும் அதனை முறையாக பின்பற்றாமல் கடைசி நேரத்தில் பரபரப்பாகக் காணப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com