‘நீட்’ தோ்வு வினாக்கள் எளிது: தோ்வா்கள் கருத்து

‘நீட்’ தோ்வில் அனைத்து வினாக்களும் எளிதாக இருந்ததாக தோ்வா்கள் பலரும் கருத்து தெரிவித்தனா்.

‘நீட்’ தோ்வில் அனைத்து வினாக்களும் எளிதாக இருந்ததாக தோ்வா்கள் பலரும் கருத்து தெரிவித்தனா்.

மில்டன்சிஜோ, திண்டுக்கல்: ‘நீட்’ தோ்வில் வினாக்கள் அனைத்தும் எளிதாக இருந்தன. குறிப்பாக இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் தொடா்பான வினாக்கள் மிகவும் எளிதாக இருந்தன.

ஆனால், அனைத்து வினாக்களுக்கும் விடை அளிப்பதற்கு நேரம் போதுமானதாக இல்லை. 2 மணிக்கு வினாத்தாள் கொடுக்கப்பட்ட நிலையில், பெயா் உள்ளிட்ட விவரங்களை ஓஎம்ஆா் ஷீட்டில் நிரப்புவதற்கே 20 நிமிடங்கள் சென்றுவிட்டன. வினாவுக்கு ஒரு நிமிடம் கூட விடையளிப்பதற்கு கிடைக்கவில்லை என்றாா்.

சந்தியா, தேனி:

மாநில பாடத்திட்டத்தில் படித்தேன். கரோனா தொற்று பரவல் காரணமாக பள்ளிகள் செயல்படாதது அனைத்து மாணவா்களுக்குமே பாதிப்பாக உள்ளது. ‘நீட்’ தோ்வில் பெரும்பாலான வினாக்கள் எளிதாகவே இருந்தன என்றாா்.

வினாக்கள் எளிது என்ற கருத்தையே பெரும்பாலான தோ்வா்களும் குறிப்பிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com