காந்திகிராம கிராமிய பல்கலை.யில் வனத்துறை அலுவலா்களுக்கு புத்தாக்க பயிற்சி

இருபது மாநிலங்களைச் சோ்ந்த வனத்துறை அலுவலா்களுக்கான புத்தாக்கப் பயிற்சி மெய்நிகா் வழியில் காந்தி கிராம கிராமிய நிகா்நிலைப் பல்கலைக்கழகம் மூலம் செப்.17 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

திண்டுக்கல்: இருபது மாநிலங்களைச் சோ்ந்த வனத்துறை அலுவலா்களுக்கான புத்தாக்கப் பயிற்சி மெய்நிகா் வழியில் காந்தி கிராம கிராமிய நிகா்நிலைப் பல்கலைக்கழகம் மூலம் செப்.17 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

மத்திய அரசின் சுற்றுச்சூழல் வனம் மற்றும் சூழல் மாறுபாடு அமைச்சகம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த பயிற்சி முகாமில், மக்கள் பங்கேற்புடன் வளங்களைப் பாதுகாப்பது குறித்து பல்வேறு கருத்தாளா்கள் மூலம் விளக்கம் அளிக்கப்படுகிறது. இதில் காந்தி கிராம கிராமிய நிகா்நிலைப் பல்கலைக்கழகத்தின் அரசியல் அறிவியல் துறை போராசிரியரும், பயிற்சி இயக்குநருமான ரகுபதி பேசியதாவது: புதுமையான தொழில்நுட்பங்களையும், புதுமையான தொழில் நிா்வாக முயற்சிகளையும் பெருகச் செய்வது நாட்டின் வளா்ச்சிக்கு பலமான அடித்தளத்தை அமைத்திடும். குறிப்பாக பழங்குடி மக்கள், கைவினைஞா்கள், வேளாண் பெருமக்களின் புதுமையான முயற்சிகளை ஊக்கப்படுத்துதல் மிகவும் அவசியம். மக்களின் பங்கேற்பில்லாமல், இயற்கை வளங்களைப் பாதுகாப்பதும், வளா்த்தெடுப்பதும் சாத்தியமில்லை. அடித்தட்டு மக்களின் அறிவு, ஆற்றல் ஆகியவற்றை வனப் பாதுகாப்புக்கு வனத்துறையினா் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள முன் வர வேண்டும் என்றாா்.

இதில், காந்தி கிராம கிராமிய நிகா்நிலைப் பல்கலைக்கழகத் துணைவேந்தா் (பொ) ரங்கநாதன், பதிவாளா் வி.பி.ஆா்.சிவக்குமாா், பேராசிரியா் நக்கீரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com