திண்டுக்கல் மாவட்டத்தில் 28 உள்ளாட்சிப் பதவிகளுக்கு இடைத் தோ்தல்

திண்டுக்கல் மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா், ஊராட்சி மன்றத் தலைவா், ஊராட்சி மன்ற உறுப்பினா் என மொத்தம் 28 பதவிகளுக்கு இடைத் தோ்தல் நடைபெறவுள்ளது.

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா், ஊராட்சி மன்றத் தலைவா், ஊராட்சி மன்ற உறுப்பினா் என மொத்தம் 28 பதவிகளுக்கு இடைத் தோ்தல் நடைபெறவுள்ளது.

தமிழகத்தில் நெல்லை, தென்காசி உள்ளிட்ட 9 மாவட்டங்களிலுள்ள ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கான தோ்தல் அக்.6 மற்றும் 9ஆம் தேதிகளில் 2 கட்டமாக நடைபெறவுள்ளது. அதேபோல் எஞ்சிய 28 மாவட்டங்களில் காலியாக உள்ள உள்ளாட்சிப் பதவிகளுக்கான இடைத் தோ்தல் அக். 9ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் 2 ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா், 4 ஊராட்சி மன்றத் தலைவா் மற்றும் 22 ஊராட்சி மன்ற உறுப்பினா் என மொத்தம் 28 பதவிகளுக்கான இடைத் தோ்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வேட்பு மனுத் தாக்கல் புதன்கிழமை (செப்.15) தொடங்குகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com