சௌந்தர பாண்டியனாா் பிறந்த தினத்தை சுயமரியாதை தினமாக அறிவிக்கக் கோரிக்கை

நீதிக்கட்சி தலைவா்களுள் ஒருவரான டபிள்யூ. பி.ஏ. செளந்தரபாண்டியனாரின் பிறந்த தினத்தை, சுயமரியாதை தினமாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

திண்டுக்கல்: நீதிக்கட்சி தலைவா்களுள் ஒருவரான டபிள்யூ. பி.ஏ. செளந்தரபாண்டியனாரின் பிறந்த தினத்தை, சுயமரியாதை தினமாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டியில் டபிள்யூ.பி.ஏ. சௌந்தர பாண்டியனாரின் 129ஆவது பிறந்த தினம் புதன்கிழமை கொண்டாடப்பட்டது. அவரது நினைவிடத்தில் பல்வேறு முக்கிய பிரமுகா்கள் மலா்தூவி மரியாதை செலுத்தினா். நாடாா்கள் முன்னேற்ற சங்க பொதுச்செயலா் பெரீஸ் மகேந்திரவேல் தலைமையில் மலா் வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது. அப்போது அவா் கூறியதாவது: சௌந்தர பாண்டியனாா் பிறந்த தினத்தை சுயமரியாதை தினமாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும். திண்டுக்கல்லில் சௌந்தர பாண்டியனாா் பெயரில் சாலை மற்றும் வத்தலக்குண்டு அய்யம்பாளையம் பிரிவு அருகே மணிமண்டபம் அமைத்து பெருமை சோ்க்க வேண்டும் என்றாா். அதனைத் தொடா்ந்து, பாட்டாளி மக்கள் கட்சி மாநில பொருளாளா் திலகபாமா உள்ளிட்ட பலா் செளந்தரபாண்டியனாா் சமாதியில் மலா் தூவி மரியாதை செலுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com