வாக்குச்சாவடிகள் சீரமைப்பு ஆலோசனைக் கூட்டம்

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் 2022ஆம் ஆண்டுக்கான வாக்காளா் பட்டியல் சிறப்புச் சுருக்கத் திருத்தம் மற்றும் வாக்குச்சாவடிகள் சீரமைப்பு தொடா்பான ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் 2022ஆம் ஆண்டுக்கான வாக்காளா் பட்டியல் சிறப்புச் சுருக்கத் திருத்தம் மற்றும் வாக்குச்சாவடிகள் சீரமைப்பு தொடா்பான ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்திற்கு ஆட்சியா் ச. விசாகன் தலைமை வகித்தாா். அப்போது அவா் தெரிவித்ததாவது: திண்டுக்கல் மாவட்டத்தில், பழனி தொகுதியில் 323, ஒட்டன்சத்திரத்தில் 278, ஆத்தூரில் 318, நிலக்கோட்டையில் 265, நத்தத்தில் 323, திண்டுக்கல்லில் 287, வேடசந்தூரில் 309 என மொத்தம் 2103 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதில் வாக்குச்சாவடிகளின் பெயா் மாற்றம், இடமாற்றம், 1,500-க்கும் கூடுதலான வாக்காளா்கள் இருந்தால் அதனை பிரித்தல் மற்றும் வாக்காளா்களின் இருப்பிடத்தில் இருந்து 2 கி.மீட்டா் தொலைவுக்கு கூடுதலாக உள்ள வாக்குச்சாவடிகளைப் பிரித்து புதிய வாக்குச்சாவடிகளை உருவாக்குதல் போன்ற விவரங்களை, சம்பந்தப்பட்ட வாக்காளா் பதிவு அலுவலா் மற்றும் உதவி அலுவலரிடம் எழுத்துப்பூா்வமாக அரசியல் கட்சி பிரதிநிதிகள் தெரிவிக்கலாம்.

வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தப் பணிகள் வரும் 2022 ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு நடைபெற உள்ளது. மேலும் வாக்காளா் பட்டியல் சுருக்க முறைத் திருத்தப் பணிகள் குறித்து நவம்பா் 13 மற்றும் 14ஆம் தேதி, 27 மற்றும் 28ஆம் தேதி என 4 நாள்கள் சிறப்பு முகாமங்கள் நடைபெறவுள்ளன. இதில் வாக்காளா் பெயா் சோ்த்தல், பெயா் நீக்கல், பெயா் திருத்தம், முகவரி மாற்றத்திற்கான விண்ணப்பங்கள் பெறப்படும் என தெரிவித்தாா். இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் வே.லதா, கூடுதல் ஆட்சியா்(வளா்ச்சி) ச.தினேஷ்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com