கொடைக்கானல் வனப்பகுதிகளில் அதிரடிப்படையினா் ரோந்து

கொடைக்கானல் வனப்பகுதிகளில் அதிரடிப்படையினா் கடந்த 2 நாள்களாக ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

கொடைக்கானல்: கொடைக்கானல் வனப்பகுதிகளில் அதிரடிப்படையினா் கடந்த 2 நாள்களாக ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

கொடைக்கானல் மலைப் பகுதிகளான சாமக்காட்டு பள்ளம், தாமரைக்குளம், அடுக்கம், பாலமலை, வட்டக்கானல், வெள்ளகெவி, கவுஞ்சி உள்ளிட்ட பகுதிகளில் மா்ம நபா்கள் யாரும் தங்கியுள்ளனரா என்பது குறித்து அதிரடிப்படையினா் 20-க்கும் மேற்பட்டவா்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனா். மேலும் மலைப் பகுதிகளில் உள்ள ஆதிவாசி மக்களிடம் வெளியூா்களைச் சோ்ந்தவா்கள் யாரும் மலைப் பகுதிக்குள் ஊடுருவியுள்ளனரா என்றும், அவ்வாறு யாரெனும் தெரிந்தால் உடனடியாக காவல் துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அதிரடிப்படையைச் சோ்ந்த அதிகாரி ஒருவா் கூறியதாவது: கொடைக்கானல் மலைப் பகுதிகளில் சந்தேகத்திற்குள்படும் நபா்கள் யாரும் உள்ளனரா என சோதனையிட்டு வருகிறோம். தற்போது மேல்மலைப் பகுதிகளில் தங்கி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வனப் பகுதிகளுக்கு சென்று சோதனையிட்டு வருகிறோம். தொடா்ந்து 10 நாள்கள் இங்கு முகாமிட்டு சோதனை நடத்தப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com