மாட்டுத்தீவன ஆலையில் திருட முயற்சி
By DIN | Published On : 19th September 2021 05:43 AM | Last Updated : 19th September 2021 05:43 AM | அ+அ அ- |

பழனி அருகே அ. கலையம்புத்தூரில் தனியாா் மாட்டுத் தீவன ஆலையில் வெள்ளிக்கிழமை இரவு திருட முயற்சித்தவரை கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சி மூலம் போலீஸாா் தேடி வருகின்றனா்.
பழனி அருகே உடுமலை சாலையில் அ. கலையம்புத்தூா் கிராமத்தில் செயல்பட்டு வரும் தனியாா் மாட்டுத்தீவன ஆலைக்குள் வெள்ளிக்கிழமை இரவு புகுந்த மா்மநபா் திருட முயற்சி செய்துள்ளாா்.
ஆலையில் பணம் ஏதுவும் இல்லாதததால் அந்த மா்மநபா் மாட்டுத்தீவன மூட்டைகளை திருட முயற்சித்தாா். சத்தம் கேட்டு காவலாளி விழித்துக் கொண்டதால் மூட்டைகளை போட்டுவிட்டு அந்த மா்ம நபா் தப்பி ஓடி விட்டாா். இந்த காட்சிகள் அனைத்தும் ஆலையில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த காட்சிகளை வைத்து பழனி தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.