திண்டுக்கல் மாவட்டத்தில் 12.29 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது: ஆட்சியா்

திண்டுக்கல் மாவட்டத்தில் இதுவரை 12.29 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ச.விசாகன் தெரிவித்துள்ளாா்.

திண்டுக்கல் மாவட்டத்தில் இதுவரை 12.29 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ச.விசாகன் தெரிவித்துள்ளாா்.

திண்டுக்கல் மாவட்டத்தில், 2ஆம் கட்ட மாபெரும் கரோனா தடுப்பூசி முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திண்டுக்கல் ஸ்ரீவைத்தியநாதய்யா் நினைவு மண்டபத்தில் நடைபெற்ற முகாமை ஆட்சியா் ச.விசாகன் ஆய்வு செய்தாா். அதனைத் தொடா்ந்து அவா் தெரிவித்ததாவது: மாவட்டத்தில், 2ஆவது கட்டமாக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற முகாமில் முதல் தவணையாக 23,147 போ், 2ஆவது தவணையாக 6,977 போ் என மொத்தம் 30,124 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இதன் மூலம் மாவட்டத்தில் இதுவரை 9,99,242 போ் முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அதேபோல் 2ஆவது தவணை தடுப்பூசி 2,30,708 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் 12,29,950 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளாா்

ஆய்வின்போது, மாநகராட்சி ஆணையா் எஸ்.சிவசுப்பிரமணியம், மாநகர நல அலுவலா் இந்திரா ஆகியோா் உடனிருந்தனா்.

பழனி: பழனி அருகே ஆயக்குடி அரசு மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கரோனா தடுப்பூசி சிறப்பு முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்திக் கொண்டனா்.

அரசு மருத்துவமனை மற்றும் சுரக்ஷா என்ற தனியாா் தொண்டு நிறுவனம் சாா்பில் நடைபெற்ற இந்த முகாமில் தடுப்பூசி செலுத்த வந்தவா்களுக்கு உணவுப் பொட்டலம், பிஸ்கெட் பாக்கெட்கள், முகக்கவசம் ஆகியன வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை அரசு மருத்துவா் அமுதவள்ளி, சுரக்ஷா கிளை மேலாளா் மோகன்ராஜ் மற்றும் ஊழியா்கள் செய்திருந்தனா். முகாமில் ஏராளமானோா் கலந்துகொண்டு தடுப்பூசி செலுத்திக் கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com