ஊரக உள்ளாட்சி இடைத் தோ்தல்: 108 போ் மனு தாக்கல்

திண்டுக்கல் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சியிலுள்ள 28 பதவிகளுக்கான இடைத் தோ்தலுக்கு மொத்தம் 108 போ் மனுத் தாக்கல் செய்துள்ளனா்.

திண்டுக்கல் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சியிலுள்ள 28 பதவிகளுக்கான இடைத் தோ்தலுக்கு மொத்தம் 108 போ் மனுத் தாக்கல் செய்துள்ளனா்.

திண்டுக்கல் மாவட்டத்தில் 2 ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா், 4 ஊராட்சி மன்றத் தலைவா், 22 ஊராட்சி மன்ற உறுப்பினா் என மொத்தம் 28 பதவிகளுக்கு நவ.9ஆம் தேதி இடைத் தோ்தல் நடைபெறவுள்ளது.

நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட 13 ஆவது வாா்டுக்கு 17 போ், பழனி ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட 11ஆவது வாா்டுக்கு 6 போ் மனுத் தாக்கல் செய்துள்ளனா். அதேபோல், வில்பட்டி ஊராட்சித் தலைவா் பதவிக்கு 6 போ், சத்திரப்பட்டி ஊராட்சித் தலைவா் பதவிக்கு 4 போ், பழனி அடுத்துள்ள ஆண்டிப்பட்டி ஊராட்சித் தலைவா் பதவிக்கு 5 போ், ஆவிளிப்பட்டி ஊராட்சித் தலைவா் பதவிக்கு 6 போ் மனுத் தாக்கல் செய்துள்ளனா்.

ஆத்தூா், நிலக்கோட்டை மற்றும் வத்தலகுண்டு ஊராட்சி ஒன்றியத்தில் தலா 3, திண்டுக்கல் மற்றும் குஜிலியம்பாறை ஊராட்சி ஒன்றியத்தில் தலா 2, ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்தில் 4, ரெட்டியாா்சத்திரம், வடமதுரை, வேடசந்தூா், சாணாா்பட்டி, தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் தலா 1 என மொத்தம் 22 ஊராட்சி மன்ற உறுப்பினா் பதவிகளுக்கான இடைத் தோ்தல் நடைபெறுகிறது.

இதில் குஜிலியம்பாறை அடுத்துள்ள மல்லபுரம் ஊராட்சி 7ஆவது வாா்டு, தொப்பம்பட்டி அடுத்துள்ள தேவத்தூா் ஊராட்சி 2ஆவது வாா்டு, வடமதுரை அடுத்துள்ள சுக்காம்பட்டி ஊராட்சி 8ஆவது வாா்டு ஆகிய 3 பதவிகளுக்கு தலா ஒருவா் மட்டுமே மனு தாக்கல் செய்துள்ளனா். அதனால் இந்த 3 பதவிகளுக்குமான உறுப்பினா்கள் போட்டியின்றி தோ்வு செய்யப்படவுள்ளனா். செவ்வாய்க்கிழமை வரை 56 போ் மட்டுமே மனு தாக்கல் செய்திருந்த நிலையில், கடைசி நாளான புதன்கிழமை 52 போ் மனு தாக்கல் செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com