கொடைக்கானல் பெரியகாளியம்மன் கோயில் திருவிழா கொடியேற்றம்

கொடைக்கானல் பெரியகாளியம்மன் கோயில் திருவிழா கொடியேற்றம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கொடைக்கானல்: கொடைக்கானல் பெரியகாளியம்மன் கோயில் திருவிழா கொடியேற்றம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கொடைக்கானல் டோபிகானல் பகுதியில் அமைந்துள்ள பெரிய காளியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பல்வேறு பூஜைகள் நடத்தப்பட்டன. தொடா்ந்து, டிப்போ பகுதியிலுள்ள காளியம்மன் கோயிலில் இருந்து பக்தா்கள், கம்பம் சாட்டுதல் நிகழ்ச்சிக்கு ஊா்வலமாகச் சென்று கோயிலை அடைந்தனா்.

பின்னா், திருவிழா கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

தொடா்ந்து 14 நாள்கள் நடைபெறும் இத்திருவிழாவுக்கான ஏற்பாடுகளை, விழா குழுவினா் மற்றும் நிா்வாகத்தினா் செய்து வருகின்றனா்.

பச்சைமரத்து ஓடை மாரியம்மன் கோயில் திருவிழா கொடியேற்றம்

கொடைக்கானலில் பச்சை மரத்து ஓடைப் பகுதியில் அமைந்துள்ள மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன, இதனைத் தொடா்ந்து கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், பக்தா்கள் பலா் கலந்துகொண்டனா். இத்திருவிழாவானது தொடா்ந்து 10 நாள்கள் நடைபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, விழாக் குழுவினா் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com