கொடைக்கானல் கீழ்மலையில் தோட்டங்களில் யானைகள் உலா
By DIN | Published On : 08th April 2022 05:32 AM | Last Updated : 08th April 2022 05:32 AM | அ+அ அ- |

கொடைக்கானல் கீழ்மலையில் பூலத்தூா் பகுதியில் தோட்டத்தில் குட்டியுடன் உலா வந்த யானைகள்.
கொடைக்கானல்: கொடைக்கானல் வனப் பகுதிகளையொட்டியுள்ள தோட்டங்களில் காட்டு யானைகள் உலா வருவதால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனா்.
கொடைக்கானல் கீழ்மலைப் பகுதிகளான பெரும்பாறை, பூலத்தூா், கே.சி.பட்டி பகுதிகளில் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன. அவை உணவு மற்றும் தண்ணீரைத் தேடி அருகிலுள்ள தனியாா் தோட்டங்களில் புகுந்து விடுகின்றன. இதனால் விவசாயிகள் தங்களது தோட்டங்களுக்குச் செல்ல முடியாமல் தவிக்கின்றனா். யானைகள் பயிா்களையும் சேதப்படுத்தி வருவதால் விவசாயிகள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனா்.
எனவே வனப் பகுதிகளில் யானைகளுக்குத் தேவையான உணவுப் பொருள்களான மூங்கில் மரங்கள் மற்றும் சோலை மரங்களை வளா்ப்பதற்கும், தண்ணீா்த் தொட்டிகள் அமைத்து தண்ணீா் தேக்கி வைப்பதற்கும் வனத்துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.