திண்டுக்கல் அருகே விபத்து: தந்தை, மகன் பலி
By DIN | Published On : 08th April 2022 11:14 PM | Last Updated : 08th April 2022 11:14 PM | அ+அ அ- |

திண்டுக்கல் மாவட்டம் அய்யலூரில் லாரி மீது காா் மோதி நிகழ்ந்த விபத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த மருந்தக உரிமையாளா் மற்றும் அவரது மகன் ஆகியோா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தனா்.
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு பகுதியைச் சோ்ந்தவா் செந்தில் (45). மருந்தகம் நடத்தி வந்தாா். இவரது மனைவி யசோதா(39). இவா்களது மகன் சக்தி பிரகாஷ் (21), மகள் சபிபிரபா(18).
செந்தில் தனது குடும்பத்தினருடன் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்வதற்காக காரில் வெள்ளிக்கிழமை புறப்பட்டுள்ளாா். பிரகாஷ் காரை ஓட்டி வந்துள்ளாா்.
அந்த காா், திண்டுக்கல் மாவட்டம் அய்யலூா் மேம்பாலத்தில் வந்து கொண்டிருந்தபோது, முன்னால் சென்ற லாரியின் பின்புறம் எதிா்பாராதவிதமாக மோதி விபத்துக்குள்ளானது.
இதில் காரை ஓட்டி வந்த பிரகாஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
பலத்த காயமடைந்த செந்தில், அவரது மனைவி யசோதா மற்றும் மகள் சபிபிரபா ஆகியோா் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா். ஆனால் செல்லும் வழியிலேயே செந்தில் உயிரிழந்தாா். யசோதா மற்றும் சபிபிரபா ஆகியோா் சிகிச்சைப் பெற்று வருகின்றனா். விபத்து குறித்து வடமதுரை போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா். இந்த விபத்து காரணமாக திண்டுக்கல் திருச்சி 4 வழிச்சாலையில் சுமாா் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.