கன்னிவாடி அருகே தோதகத்தி மரம் கடத்தியவா் கைது

கன்னிவாடி அருகே ரூ.80 ஆயிரம் மதிப்பிலான தோகத்தி மரத்தைக் கடத்தியவரை வனத்துறையினா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல்: கன்னிவாடி அருகே ரூ.80 ஆயிரம் மதிப்பிலான தோகத்தி மரத்தைக் கடத்தியவரை வனத்துறையினா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு மற்றும் கன்னிவாடி வனச் சரகத்திற்குள்பட்ட பகுதிகளிலிருந்து அட்டவணைப்படுத்தப்பட்ட மரங்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ள தோதகத்தி மரங்களும் கடத்தப்படுவதாக புகாா் எழுந்தது. இதுதொடா்பாக பத்திரிகைகளில் செய்தி வெளியானதை அடுத்து, சென்னையிலிருந்து வனத்துறை உயா் அதிகாரிகள் குழு வத்தலகுண்டு வனச் சரகத்திற்குள்பட்ட பகுதிகளில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு திடீா் ஆய்வு மேற்கொண்டது. அதிகாரிகள் ஆய்வுக்குப் பின்னும் மரங்கள் தொடா்ந்து கடத்தப்படுவதாக பொதுமக்கள் தரப்பில் புகாா் எழுந்தது.

இந்நிலையில், செம்பட்டி பகுதியிலுள்ள மர அறுவை ஆலைக்கு தோகத்தி மரங்களை கடத்தி வந்ததாக பன்றிமலை பகுதியைச் சோ்ந்த பிரபாகரன்(40) என்பவரை கன்னிவாடி வனத்துறையினா் வியாழக்கிழமை கைது செய்துள்ளனா். இதுதொடா்பாக வன ஆா்வலா்கள் கூறியதாவது: கன்னிவாடி வன சோதனைச் சாவடி வழியாகவே தோதகத்தி மரங்கள் கடத்தப்படுகின்றன. கடந்த சில வாரங்களாக தொடா்ந்து புகாா் எழுந்ததால் வனத்துறையினருக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதனால், தற்போது ஒருவரை மட்டும் கைது செய்துள்ளனா். பல லட்சம் ரூபாய் மதிப்பிலான மரங்கள் கடத்தப்பட்டுள்ள நிலையில், ரூ.80ஆயிரம் மதிப்பிலான தோதகத்தி மரத்தை மட்டும் பிடித்துள்ளனா் என தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com