பழனியில் அரசுப் பேருந்து ஜப்தி

பழனியில் விபத்து இழப்பீடு வழங்காத நிலையில் அரசுப் பேருந்து நீதிமன்ற உத்தரவின் பேரில் ஜப்தி செய்யப்பட்டது.
பழனியில் ஜப்தி செய்யப்பட்ட அரசுப் பேருந்து.
பழனியில் ஜப்தி செய்யப்பட்ட அரசுப் பேருந்து.

பழனி: பழனியில் விபத்து இழப்பீடு வழங்காத நிலையில் அரசுப் பேருந்து நீதிமன்ற உத்தரவின் பேரில் ஜப்தி செய்யப்பட்டது. பழனியை அடுத்த பூசாரிகவுண்டன் வலசு கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி சின்னப்பன் என்ற பெரியசாமி (40).

2010 ஆம் ஆண்டு தொப்பம்பட்டி- வேலம்பட்டி சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது எதிரே வந்த அரசுப் பேருந்து மோதியதில் உயிரிழந்தாா். சின்னப்பனின் மகள்கள் நித்தியா, வெண்ணிலா மற்றும் தாய், தந்தையா் இழப்பீடு கேட்டு பழனி நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தனா்.

இவ்வழக்கில் 2018 ஆம் ஆண்டு ரூ.8,19,000 இழப்பீட்டுத் தொகை 7.5% வட்டியுடன் வழங்க நீதிபதி உத்தரவிட்டாா். இந்த தொகையை வழங்க அரசு போக்குவரத்துக் கழகம் கால தாமதம் செய்த நிலையில், மனுதாரா்கள் மேல்முறையீடு செய்தனா். இவ்வழக்கில் ரூ.15,22,000 இழப்பீடு வழங்கவும் தவறினால் அரசு போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான பேருந்தை ஜப்தி செய்து நடவடிக்கை எடுக்கவும் நீதிபதி உத்தரவிட்டாா்.

அதைத் தொடா்ந்து இழப்பீட்டுத் தொகை வழங்க காலதாமதம் செய்ததால் வியாழக்கிழமை பழனி பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பழனி - திருப்பூா் செல்லும் அரசுப் பேருந்தை நீதிமன்ற பணியாளா்கள் ஜப்தி செய்து பழனி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நிறுத்தி வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com