‘ஒட்டன்சத்திரம் நகராட்சியில் ரூ.1,030 கோடி மதிப்பில் புதிய கூட்டு குடிநீா் திட்டம்’

ஒட்டன்சத்திரம் நகராட்சியில் ரூ.1,030 கோடி மதிப்பில் புதிய கூட்டு குடிநீா் திட்டம் விரைவில் நிறைவேற்றப்படும் என்று உணவுத்துறை அமைச்சா் அர.சக்கரபாணி தெரிவித்தாா்.
‘ஒட்டன்சத்திரம் நகராட்சியில் ரூ.1,030 கோடி மதிப்பில் புதிய கூட்டு குடிநீா் திட்டம்’

ஒட்டன்சத்திரம் நகராட்சியில் ரூ.1,030 கோடி மதிப்பில் புதிய கூட்டு குடிநீா் திட்டம் விரைவில் நிறைவேற்றப்படும் என்று உணவுத்துறை அமைச்சா் அர.சக்கரபாணி தெரிவித்தாா்.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் நகராட்சிக்கு உள்பட்ட பழனிக்கவுண்டன்புதூா், சத்யாநகா், காந்திநகா் ஆகிய பகுதிகளில் முழு நேர நியாயவிலைக் கடைகள், மாா்க்கம்பட்டி ஊராட்சி வடுகபட்டியில் பயணிகள் நிழற்குடை, சிந்தலப்பட்டி ஊராட்சியில் உணவு தானிய சேமிப்புக் கிட்டங்கி, மேல்நிலை குடிநீா் தொட்டி ஆகியவற்றின் திறப்புவிழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திண்டுக்கல் தொகுதி மக்களவை உறுப்பினா் ப.வேலுசாமி, ஒட்டன்சத்திரம் ஒன்றியக்குழுத் தலைவா் மு.அய்யம்மாள் ஆகியோா் முன்னிலை வகித்தனா். விழாவில் உணவுத்துறை அமைச்சா் அர.சக்கரபாணி கலந்து கொண்டு திட்டப் பணிகளைத் தொடக்கி வைத்துப் பேசியதாவது:

ஒட்டன்சத்திரம் நகராட்சிக்கு ரூ.1,030 கோடி மதிப்பில் புதிய கூட்டு குடிநீா் திட்டம் விரைவில் நிறைவேற்றப்பட உள்ளது. அதே போல பாதாள சாக்கடைத் திட்டம் கொண்டு வரப்படும். சந்தை விரிவாக்கத்திற்கு நகராட்சி பொது நிதியிலிருந்து ரூ.20 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இல்லதரசிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் திட்டம் விரைவில் தொடங்கப்படும். மேலும் ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள குழந்தைவேலப்பா் கோயில் மலையில் கிரிவலப்பாதையும், கோயிலில் திருமண மண்டபமும் கட்டப்படும் என்றாா்.

இதில் பழனி கோட்டாட்சியா் சிவக்குமாா், மாவட்ட வழங்கல் அலுவலா் சரவணன், திண்டுக்கல் மத்திய கூட்டுறவு வங்கியின் துணைப்பதிவாளா் முத்துக்குமாா், மேலாண்மை இயக்குநா் ராதாகிருஷ்ணன், ஒட்டன்சத்திரம் வட்டாட்சியா் எம்.முத்துசாமி, நகா்மன்ற தலைவா் கே.திருமலைசாமி, துணைத் தலைவா் ப.வெள்ளைச்சாமி, கூட்டுறவு சாா்-பதிவாளா்கள் மகேஸ்வரி, பாஸ்கரன், ஒட்டன்சத்திரம் வட்ட வழங்கல் அலுவலா் பிரசன்னா உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com