இணையவழி குற்றங்கள் தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி
By DIN | Published On : 27th April 2022 12:00 AM | Last Updated : 27th April 2022 12:00 AM | அ+அ அ- |

பழனி பழனியாண்டவா் கலை மற்றும் பண்பாட்டு கல்லூரியில், இணையவழிக் குற்றங்கள் தடுப்பது குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் பிரபாகா் தலைமை வகித்தாா். இதில், இணைய வழியில் நடைபெறும் குற்றங்கள் குறித்தும், அவற்றில் இருந்து மாணவ சமுதாயம் எப்படி தங்களை பாதுகாத்துக் கொள்வது என்பது குறித்தும் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் இணைய வழி குற்றங்களால் பாதிக்கப்பட்டவா்கள் அணுக வேண்டிய காவல்துறை பிரிவு மற்றும் 24 மணிநேரமும் இயங்கும் இலவச தொலைபேசி எண் 1930 போன்றவை குறித்த தகவல்கள் மாணவா்களுக்கு தெரிவிக்கப்பட்டது.
வரலாற்றுத்துறை தலைவா் ரவிச்சந்திரன் வாழ்த்துரையாற்றினாா். ஏற்பாடுகளை கல்லூரி சைபா் கிரைம் தடுப்பு அலுவலா் மனோகரன் செய்திருந்தாா். நிகழ்ச்சியில் துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள் மற்றும் மாணவா்கள் கலந்து கொண்டனா்.