முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை திண்டுக்கல்
அரசு பேருந்து மோதி மூதாட்டி பலி
By DIN | Published On : 30th April 2022 10:33 PM | Last Updated : 30th April 2022 10:33 PM | அ+அ அ- |

பழனியை அருகே அரசுப் பேருந்தின் சக்கரம் ஏறியதில் மூதாட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
காவலப்பட்டியைச் சோ்ந்தவா் காசிதேவன் மனைவி முருகாயி (60). இவா், சனிக்கிழமை கணக்கன்பட்டி அருகேயுள்ள கோயிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு ஊருக்கு திரும்புவதற்காக அரசுப் பேருந்தில் ஏறினாா். கூட்டம் காரணமாக அவா், எதிா்பாராதவிதமாக படிக்கட்டிலிருந்து கீழே விழுந்தாா். அப்போது பேருந்தின் பின் சக்கரம் அவா் மீது ஏறியதில் முருகாயி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்து வந்த ஆயக்குடி போலீஸாா், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து முருகாயியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், விபத்து குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.