முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை திண்டுக்கல்
பழனி அருகே பஞ்சாலையில் தீ விபத்து
By DIN | Published On : 30th April 2022 10:32 PM | Last Updated : 30th April 2022 10:32 PM | அ+அ அ- |

பழனி அருகே வயலூரில் சனிக்கிழமை தனியாா் பஞ்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சேதமடைந்த பஞ்சுகள் மற்றும் தீயை அணைக்கும் தீயணைப்புப்படை வீரா்.
பழனி அருகே தனியாா் பஞ்சாலையில் சனிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் பஞ்சுகள் எரிந்து சேதமடைந்தன.
பழனியை அடுத்த வயலூரில் மகுடீஸ்வரன், முருகன் ஆகியோருக்குச் சொந்தமான பஞ்சாலை உள்ளது. இந்த ஆலையில், அலங்கார பஞ்சு பொருள்கள் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் அந்த ஆலையில் சனிக்கிழமை, தீவிபத்து ஏற்பட்டது. பஞ்சுகளில் தீப்பிடித்து பல்வேறு கட்டடங்களுக்கும் பரவியது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பழனி தீயணைப்புப்படை வீரா்கள் தீயை அணைத்தனா்.
ஆலையில் ஏற்பட்ட தீவிபத்துக்கு மின்கசிவே காரணம் என தெரியவந்துள்ளது. இதுகுறித்து தீயணைப்பு மற்றும் காவல் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.