முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை திண்டுக்கல்
பழனி மகளிா் கல்லூரியில் வேலைவாய்ப்பு விழிப்புணா்வு
By DIN | Published On : 30th April 2022 10:29 PM | Last Updated : 30th April 2022 10:29 PM | அ+அ அ- |

பழனி அருள்மிகு பழனியாண்டவா் மகளிா் கலைக்கல்லூரியில் சனிக்கிழமை காப்பீட்டுத்துறையில் வேலைவாய்ப்பு குறித்த ஒருநாள் விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் முனைவா் புவனேஸ்வரி தலைமை வகித்தாா். கல்லூரி பேரவை துணைத் தலைவா் முனைவா் வள்ளியம்மாள் வாழ்த்துரை வழங்கினாா். திருப்பூா் மாவட்டம் உடுமலைப்பேட்டை எஸ்பிஐ, காப்பீட்டு நிறுவன மண்டல இணை மேலாளா் சுந்தரபாண்டியன், கிளை மேலாளா் சக்திவடிவேலன், காப்பீட்டு ஆலோசகா் கேசவன் உள்ளிட்டோா் சிறப்பு விருந்தினா்களாக பங்கேற்றுப் பேசினா். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரியின் வேலைவாய்ப்பு மைய அலுவலா்கள் வனிதா, வசந்தி மற்றும் சுமித்ரா தேவி உள்ளிட்டோா் செய்திருந்தனா். முகாமில் 700-க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனா்.