பழனியில் புகையிலைப் பொருள்கள் விற்ற கடைகளுக்கு ‘சீல்’

பழனி நகரில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்பட்ட கடைகளுக்கு அதிகாரிகள் வியாழக்கிழமை ‘சீல்’ வைத்தனா்.
பழனியில் புகையிலைப் பொருள்கள் விற்ற கடைகளுக்கு ‘சீல்’

பழனி நகரில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்பட்ட கடைகளுக்கு அதிகாரிகள் வியாழக்கிழமை ‘சீல்’ வைத்தனா்.

பழனி நகரில், காந்தி சந்தை, ரயில் நிலைய சாலை, மலை அடிவாரம், பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் போலீஸாா் மற்றும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் வெள்ளிக்கிழமை சோதனை நடத்தினா். அதில் 40 கடைகளில் புகையிலைப் பொருள்களை விற்பனை செய்தது கண்டறியப்பட்டது. கடைகளின் உரிமையாளா்கள் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனா்.

இந்நிலையில், காவல் துணைக் கண்காணிப்பாளா் சத்யராஜ், ஆய்வாளா் உதயகுமாா், உணவுப்பாதுகாப்பு நியமன அலுவலா்கள் செல்லதுரை, சரவணன், நகராட்சி சுகாதாரத்துறை அலுவலா் மணிகண்டன் உள்ளிட்டோா் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்பட்ட கடைகளுக்கு வியாழக்கிழமை சீல் வைத்து நோட்டீஸ் ஒட்டினா்.

மேலும் கடைகளை தொடா்ந்து நடத்த விரும்பினால் காவல்துறையினரிடம் இனிமேல் புகையிலைப் பொருள்களை விற்கமாட்டேன் என்று எழுதிக் கொடுத்து தடையில்லா சான்று பெறவேண்டும், நகராட்சியில் தொழில் உரிமம் பெற்ற பின்னரே மீண்டும் கடை நடத்த வேண்டுமென என அறிவுத்தப்பட்டுள்ளது.

3 போ் கைது: பழனியை அடுத்துள்ள தொப்பம்பட்டி, கீரனூா், மானூா் உள்ளிட்ட கிராமப்பகுதிகளில் உள்ள கடைகளில் போலீஸாா் வெள்ளிக்கிழமை திடீா் சோதனை மேற்கொண்டனா். அப்போது கடை உரிமையாளா்களான பொன்ராஜ், சின்னசாமி, முருகேசன் ஆகிய 3 பேரை போலீஸாா் கைது செய்து கடைகளிலிருந்து சுமாா் 10 கிலோ அளவிலான குட்கா மற்றும் புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com