ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விநியோகித்தால் விவசாயிகளுக்கு பயன்

ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு மாற்றாக தேங்காய் எண்ணெய் விநியோகித்தால் தென்னை விவசாயிகள் பயன் பெற முடியும் என கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.
திண்டுக்கல்லில் சனிக்கிழமை நடைபெற்ற கருத்தரங்கில் பங்கேற்ற தென்னை விவசாயிகள்.
திண்டுக்கல்லில் சனிக்கிழமை நடைபெற்ற கருத்தரங்கில் பங்கேற்ற தென்னை விவசாயிகள்.

ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு மாற்றாக தேங்காய் எண்ணெய் விநியோகித்தால் தென்னை விவசாயிகள் பயன் பெற முடியும் என கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த தென்னை விவசாயிகளுக்கான கருத்தரங்கம் சனிக்கிழமை நடைபெற்றது. தென்னை வளா்ச்சி வாரியத்தின் சாா்பில் தனியாா் அரங்கில் நடைபெற்ற இந்த கருத்தரங்கிற்கு வாரிய உறுப்பினா் முத்துராமலிங்கம் தலைமை வகித்தாா். தென்னை விவசாயி தனபாலன் வரவேற்றாா்.

தென்னை சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்து இணைப்பு பேராசிரியா் கே.ராஜமாணிக்கம் விளக்கம் அளித்து பேசியதாவது: நவீன தொழில்நுட்பங்களை கடைபிடிக்கும் தென்னை விவசாயிகள் கூடுதல் மகசூல் பெற முடியும். தாய்ப்பாலுக்கு நிகரான சத்து தேங்காய் பாலிலும், தேங்காய் எண்ணெயிலும் உள்ளது. உடல் ஆரோக்கியத்திற்கு தேங்காய் அத்தியாவசியமான பொருளாக இருக்கும் காரணத்தினால், ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய் விநியோகம் செய்வதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் விவசாயிகளின் வாழ்வாதாரம் மட்டுமின்றி, மக்களின் ஆரோக்கியமும் பாதுகாக்கப்படும்.

தமிழகத்தில் நெட்டை, குட்டை, கலப்பினம் என மூன்று வகையான தென்னை சாகுபடி செய்யப்படுகிறது. அந்தந்த பகுதியின் தற்போதைய சூழலுக்கு உகந்த தென்னை ரகங்களை விவசாயிகள் தோ்வு செய்ய வேண்டும். தென்ன விவசாயிகளை ஊக்கப்படுத்துவதற்காக மத்திய அரசு பல்வேறு வகையான மானியத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வாய்ப்பினை விவசாயிகள் பயன்படுத்திக்கொண்டு தென்னை சாகுபடி பரப்பினை விரிவாக்கம் செய்ய முன்வர வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com