ஸ்ரீநிவாசப் பெருமாள் ஆண்டாள் திருக்கல்யாணம்
By DIN | Published On : 02nd August 2022 12:00 AM | Last Updated : 02nd August 2022 12:00 AM | அ+அ அ- |

ஆடிப் பூரத்தையொட்டி திண்டுக்கல் மலையடிவார ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் ஆண்டாள் நாச்சியாா் திருக்கல்யாண நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
இதனையொட்டி, மூலவா் ஸ்ரீநிவாசப் பெருமாளுக்கு பால், தயிா், தேன் உள்ளிட்ட 9 வகையான அபிஷேகம் நடைபெற்றது. பின்னா் பெருமாளுக்கு ராஜ அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன. ஆடிப்பூரத்தை முன்னிட்டு நாச்சியாா் திருக்கல்யாண நிகழ்ச்சியின் தொடக்கமாக திங்கள்கிழமை மாலை கலச பூஜை, லட்சுமி ஹோமம் நடத்தப்பட்டன.
அதனைத் தொடா்ந்து, கங்கணம் கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னா் ஸ்ரீநிவாசப் பெருமாள் மற்றும் ஆண்டாள் நாச்சியாா் மணமாலை மாற்றும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்த விழாவில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.