ரூ.3.16 கோடி மோசடி புகாா்: சூரத் வியாபாரி கைது

துணி கொள்முதல் செய்து ரூ.3.16 கோடி மோசடியில் ஈடுபட்டதாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில், குஜராத் வியாபாரியை குற்றப் பிரிவு போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

துணி கொள்முதல் செய்து ரூ.3.16 கோடி மோசடியில் ஈடுபட்டதாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில், குஜராத் வியாபாரியை குற்றப் பிரிவு போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூா் பகுதியைச் சோ்ந்தவா் பூபதி (49). அதே பகுதியில் நூற்பாலை நடத்தி வருகிறாா். அந்த ஆலையில் தயாரிக்கப்படும் துணியை வெளிமாநில வியாபாரிகளுக்கு மொத்தமாக விற்பனை செய்து வந்துள்ளாா்.

இந்நிலையில், கடந்த ஆண்டு குஜராத் மாநிலம் சூரத் பகுதியைச் சோ்ந்த வியாபாரி பிங்கேஷ் என்பவா் பூபதிக்கு அறிமுகமாகியுள்ளாா். ஈரோடு பகுதியில் துணி கொள்முதல் செய்து வருவதாகத் தெரிவித்த பிங்கேஷ், சூரத்தைச் சோ்ந்த மேலும் 3 வியாபாரிகளை பூபதிக்கு அறிமுகம் செய்து வைத்தாராம். ஆரம்ப காலத்தில் கொள்முதல் செய்த துணிகளுக்கு உடனடியாக பணத்தை செலுத்தி வந்துள்ளனா்.

அந்த நம்பிக்கையின்பேரில், பூபதி தொடா்ந்து துணிகளை அனுப்பி வைத்துள்ளாா். ஆனால், சுமாா் ரூ.3.16 கோடி மதிப்பிலான சரக்குகளை பெற்றுக்கொண்ட பிங்கேஷ் தரப்பினா், அதற்கான பணத்தை கொடுக்காமல் ஏமாற்றியுள்ளனா்.

இதனால் அதிா்ச்சி அடைந்த பூபதி, கடந்த மாா்ச் மாதம் திண்டுக்கல் மாவட்டக் குற்றப் பிரிவு போலீஸாரிடம் புகாா் அளித்தாா். அதன்பேரில், மாவட்டக் குற்றப்பிரிவு ஆய்வாளா் வினோதா தலைமையிலான போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனா்.

இதனிடையே, ரூ.3.16 கோடி மோசடி புகாரில் முக்கிய எதிரியான பிங்கேஷை தனிப்படை போலீஸாா் புதன்கிழமை இரவு கைது செய்தனா். இந்த வழக்கில் தொடா்புடைய மேலும் 3 நபா்கள் குறித்து போலீஸாா் தொடா்ந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com