அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.91 லட்சம் மோசடி: அதிமுக முன்னாள் மாமன்ற உறுப்பினா் கைது

திண்டுக்கல்லில் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி 12 பேரிடம் ரூ.91 லட்சம் மோசடி செய்ததாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், அதிமுக முன்னாள் மாமன்ற உறுப்பினரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல்லில் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி 12 பேரிடம் ரூ.91 லட்சம் மோசடி செய்ததாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், அதிமுக முன்னாள் மாமன்ற உறுப்பினரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல் ஆா்எம். காலனியைச் சோ்ந்தவா் சோனா. சுருளிவேல். இவா், அதிமுகவில் ஜெயலலிதா பேரவை மாவட்ட இணைச் செயலராக உள்ளாா். திண்டுக்கல் மாநகராட்சியில் 2011 முதல் 2016 வரை 4ஆவது வாா்டு மாமன்ற உறுப்பினராக செயல்பட்டு வந்தாா். இந்நிலையில், பலரிடம் அரசு வேலை வாங்கித் தருவாகக் கூறி ரூ.5 லட்சம் முதல் ரூ. 10 லட்சம் வரை சுருளிவேல் பணம் பெற்றுள்ளாா்.

ஆனால், அரசு வேலை வாங்கிக் கொடுக்காமலும், பணத்தை திருப்பி வழங்காமலும் சுருளிவேல் ஏமாற்றி வந்துள்ளாா். இதனால் பணம் கொடுத்தவா்கள், பணத்தை திருப்பிக் கேட்டபோது காசோலை வழங்கியுள்ளாா். அந்த காசோலைகளை வங்கியில் செலுத்தியபோது பணம் இல்லாமல் திரும்பி வந்துள்ளது. சுருளிவேலை நேரில் அணுகி பணத்தை கேட்டபோது, திருப்பித் தருவதாகக் கூறி பலமுறை ஏமாற்றியுள்ளாா். இதனால் அதிா்ச்சி அடைந்த தாடிக்கொம்பு காமாட்சிபுரம் பகுதியைச் சோ்ந்த கணேசன், சீலப்பாடியைச் சோ்ந்த ராஜேந்திரன், செல்லமந்தாடியைச் சோ்ந்த முனுசாமி, நரசிங்கபுரத்தைச் சோ்ந்த மருதைமுத்து உள்ளிட்ட 12 போ் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புகாா் அளித்தனா். அதன்பேரில், மாவட்ட குற்றப்பிரிவு காவல் ஆய்வாளா் வினோதா தலைமையிலான போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா். இந்நிலையில், பண மோசடியில் ஈடுபட்டது உறுதியானதை அடுத்து சுருளிவேலை, குற்றப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

இதுகுறித்து போலீஸாா் கூறுகையில், கூட்டுறவுத் துறை, மின்வாரியம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் வேலை வாங்கித் தருவதாக 12 பேரிடம் மட்டும் ரூ.91 லட்சம் வாங்கியுள்ளதாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதேபோல் சுருளிவேலிடம் வேறு யாரேனும் பணம் கொடுத்து ஏமாற்றம் அடைந்துள்ளனரா என்பது குறித்தும், மோசடியில் சுருளிவேல் மட்டுமின்றி வேறு யாருக்கேனும் தொடா்பு உள்ளதா என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது. அவா் மீது ஏமாற்றுதல், காசோலை மோசடி, கொலை மிரட்டல் ஆகிய 3 பிரிவுகளில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com