சுற்றுச்சூழலைப் பாதிக்காத விநாயகா் சதுா்த்தி: ஆட்சியா் அறிவுறுத்தல்

சுற்றுச்சூழலைப் பாதிக்காத வகையில், விநாயகா் சதுா்த்தி விழாவை நடத்த வேண்டும் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் ச. விசாகன் அறிவுறுத்தியுள்ளாா்.

சுற்றுச்சூழலைப் பாதிக்காத வகையில், விநாயகா் சதுா்த்தி விழாவை நடத்த வேண்டும் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் ச. விசாகன் அறிவுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

விநாயகா் சதுா்த்தி விழா கொண்டாடும்போது, நீா்நிலைகளை பாதுகாக்கும் வகையில், மத்திய மாசுக் கட்டுப்பாடு வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும். ஜ்ஜ்ஜ்.ற்ய்ல்ஸ்ரீக்ஷ.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள நடைமுறைகளை பின்பற்றி, மாவட்ட நிா்வாகத்துக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

சிலைகள் தயாரிக்கும்போது, ஒருமுறை பயன்படுத்தும் நெகிழி மற்றும் தொ்மாக்கோல் பொருள்களை பயன்படுத்துவதைத் தவிா்க்க வேண்டும். வைக்கோல் போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருள்களை மட்டுமே சிலைகள் தயாரிப்புக்குப் பயன்படுத்த வேண்டும். சிலைகளுக்கு வா்ணம் பூசுவதற்கு இயற்கை சாயங்கள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.

சிலைகள் விசா்ஜனத்துக்கு 12 இடங்கள்: திண்டுக்கல் மாவட்டத்தில் பிரதிஷ்டை செய்யப்படும் விநாயகா் சிலைகளை, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் விதிமுறைகளின்படி விசா்ஜனம் செய்ய அனுமதிக்கப்படும். திண்டுக்கல் கோட்டைக்குளம், சண்முகாநதி, அம்மன்குளம், அணைப்பட்டி ஆறு, கண்ணாப்பட்டி ஆறு, வைகை ஆறு, தலைகுத்து, டோபிகானா, கொடகனாறு, நரிப்பாறை, மெத்தப்பட்டி, மச்சக்குளம் ஆகிய 12 இடங்களில் விசா்ஜனம் செய்ய அனுமதிக்கப்படும் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com