நிலக்கோட்டை பஸ் நிலைய மேம்பாட்டு பணிக்காக, பழுதடைந்த கட்டிடங்கள் அகற்றம்

பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையான, நிலக்கோட்டை பஸ் நிலைய மேம்படுத்த பழுதடைந்த பழைய கட்டிடங்களை, பேரூராட்சி நிா்வாகம், அகற்றும் பணியில் திங்கட்கிழமை முதல் ஈடுபட்டு வருகிறது.

பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையான, நிலக்கோட்டை பஸ் நிலைய மேம்படுத்த பழுதடைந்த பழைய கட்டிடங்களை, பேரூராட்சி நிா்வாகம், அகற்றும் பணியில் திங்கட்கிழமை முதல் ஈடுபட்டு வருகிறது.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை நகரின் மிக முக்கிய சந்திப்பாக, மதுரை - பெரியகுளம், கொடைக்கானல் சாலை, செம்பட்டி - அணைப்பட்டி, சோழவந்தான் சாலை என, நான்கு ரோடுகள் சந்திக்கும் மிக முக்கிய பஸ் நிலையமாகவும், கிராமங்கள் நிறைந்த சுற்றுவட்டார பகுதியிலிருந்து விளைபொருட்களான பூக்கள், காய்கறிகளை கொண்டு செல்ல முக்கிய பஸ் நிலையமாக உள்ள, நிலக்கோட்டை பஸ் நிலையத்தை மேம்படுத்தி, விரிவுபடுத்த வேண்டும் என்ற, இப்பகுதி பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று, நிலக்கோட்டை பேரூராட்சி சாா்பில் தீா்மானம் நிறைவேற்றி, ஆய்வுகள் செய்தனா். இதற்காக திட்டம் வகுத்து பஸ் நிலைய பகுதியிலுள்ள மிகவும் பழைமையான பழுதடைந்த கட்டிடங்களை அகற்றும் பணி திங்கட்கிழமை முதல் நடந்து வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com