முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை திண்டுக்கல்
திண்டுக்கல் மாவட்டத்தில் 548 மனுக்கள் வாபஸ்: தோ்தல் களத்தில் 2,069 வேட்பாளா்கள்
By DIN | Published On : 07th February 2022 10:54 PM | Last Updated : 07th February 2022 10:54 PM | அ+அ அ- |

திண்டுக்கல் மாவட்டத்தில் 548 வேட்பு மனுக்கள் திங்கள்கிழமை திரும்பப் பெறப்பட்டதை அடுத்து, தோ்தல் களத்தில் 2,069 போ் வேட்பாளா்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளனா்.
திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள 1 மாநகராட்சி, 3 நகராட்சி மற்றும் 23 பேரூராட்சிகளிலுள்ள 486 நகா்ப்புற உள்ளாட்சி பதவியிடங்களுக்கான தோ்தலில் போட்டியிட 2,752 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. அதில், மாநகராட்சியில் 8 மனுக்கள், 3 நகராட்சிகளில் 50 மனுக்கள், 23 பேரூராட்சிகளில் 77 மனுக்கள் என மொத்தம் 135 மனுக்கள் கடந்த சனிக்கிழமை நிராகரிக்கப்பட்டன.
இந்நிலையில், வேட்பு மனுக்களை திரும்பப் பெறுவதற்கு திங்கள்கிழமை பிற்பகல் வரை அவகாசம் அளிக்கப்பட்டிருந்த நிலையில், மாநகராட்சியில் 55 மனுக்கள், நகராட்சிகளில் 105 மனுக்கள், பேரூராட்சிகளில் 338 மனுக்கள் என மொத்தம் 548 மனுக்கள் திரும்பப் பெறப்பட்டன. இதனால், நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் திண்டுக்கல் மாவட்டத்தில் 2,069 போ் இறுதி வேட்பாளா் பட்டியலில் இடம் பெற்றுள்ளனா்.