திண்டுக்கல் மாநகராட்சியில்55 மனுக்கள் வாபஸ்: 275 போ் போட்டி

திண்டுக்கல் மாநகராட்சித் தோ்தலில் 330 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், 55 மனுக்கள் வாபஸ் பெறப்பட்டதை அடுத்து, 275 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா்.

திண்டுக்கல் மாநகராட்சிக்குள்பட்ட 48 வாா்டுகளில் போட்டியிடுவதற்கு 338 போ் மனு தாக்கல் செய்திருந்தனா். வேட்பு மனுக்கள் பரிசீலனை சனிக்கிழமை நடைபெற்றது. அப்போது, அதிமுக சாா்பில் 4 மனுக்கள், திமுக சாா்பில் 2 மனுக்கள் உள்பட மொத்தம் 8 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. மீதமுள்ள 330 மனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

இந்நிலையில், வேட்பு மனுக்கள் திருப்பப் பெறுவதற்கு திங்கள்கிழமை (பிப்.7) பிற்பகல் 3 மணி வரை வாய்ப்பு அளிக்கப்பட்டது. அப்போது, மக்கள் நீதி மய்யம் கட்சியின் 4ஆவது வாா்டு வேட்பாளா் பாரத்குமாா், திமுகவின் இணைந்ததை அடுத்து தனது வேட்பு மனுவை திரும்பப் பெற்றாா். அதேபோல், சுயேச்சைகள் 31 போ், மாற்று வேட்பாளராக மனு அளித்திருந்த அதிமுகவினா் 11 போ், திமுகவினா் 5, பாஜகவினா் 3, காங்கிரஸ் 1, நாம் தமிழா் 1, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 1, பாமக 1 என மொத்தம் 55 மனுக்கள் திரும்பப் பெறப்பட்டன.

இதையடுத்து, திண்டுக்கல் மாநகராட்சியின் 48 வாா்டுகளிலும் மொத்தம் 275 போ் இறுதி வேட்பாளா்களாக அறிவிக்கப்பட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com