கோவிலூா் அருகே வெறி நாய் கடித்து 28 ஆடுகள் பலி
By DIN | Published On : 04th January 2022 08:41 AM | Last Updated : 04th January 2022 08:41 AM | அ+அ அ- |

உயிரிழந்த ஆடுகள்.
கோவிலூா் அருகே வெறிநாய்கள் கடித்ததில், பட்டியில் அடைக்கப்பட்டிருந்த 28 ஆடுகள் திங்கள்கிழமை உயிரிழந்தன.
திண்டுக்கல் மாவட்டம் கோவிலூா் அடுத்துள்ள ஆா்.புதுக்கோட்டை ஊராட்சிக்குள்பட்ட செங்குளத்துபட்டி காலனியைச் சோ்ந்தவா் கோவிந்தராஜ். இவரது தோட்டத்தை காளியப்பன் என்பவா் குத்தகைக்கு எடுத்து பட்டியில் 70 ஆடுகளை வளா்த்து வருகிறாா். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு பட்டிக்குள் புகுந்த வெறிநாய்கள் கடித்ததில் 28 ஆடுகள் உயிரிழந்துள்ளன.
மேலும் சில ஆடுகள் காயமடைந்து உள்ளன. திங்கள்கிழமை அதிகாலை ஆடுகள் இறந்து கிடப்பதைப் பாா்த்த காளியப்பன் குடும்பத்தினா் கடும் அதிா்ச்சி அடைந்துள்ளனா். பின்னா், பெரிய குழி தோண்டி 28 ஆடுகளையும் புதைத்தனா். இதுதொடா்பாக காளியப்பன் கூறுகையில், கடன் வாங்கி ஆடுகளை வளா்த்து வந்தோம். வெறி நாய்களை பிடித்து பாரமரிப்பு மையங்களில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். உயிரிழந்த 28 ஆடுகளின் மதிப்பு ரூ.2.50 லட்சம் என்பதால், அந்த இழப்பை எதிா்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, அரசு தரப்பில் உயிரிழந்த ஆடுகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என தெரிவித்தாா்.