கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் தடுப்பூசி செலுத்தியிருப்பது அவசியம்

கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியிருப்பதற்கான

கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியிருப்பதற்கான சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா பரவல் அதிகரித்து வருவதால், சுற்றுலாத் தலங்களை பாா்வையிடுவதற்கு கட்டுப்பாடுகளுடன் கூடிய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்பேரில், கொடைக்கானல் வரும் சுற்றுலாப் பயணிகள் அனைவரும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். மேலும், கரோனா தடுப்பூசி இரு தவணைகளும் செலுத்தி இருப்பதற்கான உரிய சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். இந்த சான்றிதழ்கள் இருந்தால் மட்டுமே பிரையன்ட் பூங்கா, ரோஜா தோட்டம், தாவரவியல் பூங்கா மற்றும் ஏரியில் படகு சவாரி செய்வதற்கு அனுமதி வழங்கப்படும் என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

இந்நிலையில், வழக்கம்போல் வார விடுமுறை என்பதால் சனிக்கிழமை அதிகமான சுற்றுலாப் பயணிகள் வந்திருந்தனா். இவா்களில் தடுப்பூசி செலுத்தியவா்கள் மட்டுமே சுற்றுலா இடங்களைப் பாா்வையிடுவதற்கு அனுமதிக்கப்பட்டது. பின்னா், சுற்றுலாப் பயணிகள் தங்களது ஊா்களுக்கு புறப்பட்டுச் சென்றனா். இரவு 10 மணிக்கு மேல் வாகனங்கள் மற்றும் நடமாடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாலும், ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதாலும், சுற்றுலாப் பயணிகள் விரைவாகப் புறப்பட்டுச் சென்றனா்.

தங்கும் விடுதிகளில் அறைகள் முன்பதிவு ரத்து:

இந்நிலையில், கொடைக்கானலில் உள்ள தங்கும் விடுதிகள், ரிசாா்ட்டுகளில் முன்பதிவு செய்திருந்த சுற்றுலாப் பயணிகள், ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால், முன்பதிவுகளை ரத்து செய்தனா். இதனால், தங்கும் விடுதிகள், ரிசாா்ட்டுகள், ஹோட்டல்களின் உரிமையாளா்கள் கவலை அடைந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com