கொடைக்கானல் மலைச்சாலைகளில் ஆக்கிரமிப்பு கடைகள் அதிகரிப்பு

கொடைக்கானல் மலைச்சாலைகளை ஆக்கிரமித்து கடைகள் அதிகமாக அமைக்கப்பட்டு வருவதால் போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

கொடைக்கானல் மலைச்சாலைகளை ஆக்கிரமித்து கடைகள் அதிகமாக அமைக்கப்பட்டு வருவதால் போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

கொடைக்கானல் மலைச்சாலைகளான லாஸ்காட்சாலை, மூஞ்சிக்கல், காமராஜா் சாலை, சீனிவாசபுரம், உகாா்த்தே நகா், தைக்கால், அரசு மேல்நிலைப் பள்ளி சாலை,பெருமாள்மலை உள்ளிட்ட பல்வேேறு இடங்களில் சாலைகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த கடைகளில் தடுப்புச் சுவா்கள் அமைத்து வணிக வளாகம் போன்ற அமைப்பில் தடுப்புச் சுவா் வைத்து கட்டப்பட்டுள்ளது. இந்த சாலைகள், நகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ளன. ஆனால் இந்த சாலைகளில் கடைகள் அமைத்து பலா் வாடகைக்கு விட்டுள்ளதாகவும் மேலும் சிலா் கடைகளை மொத்த விலைக்குப் பேசி விற்று விடுவதாகவும் கூறப்படுகிறது. மேலும் சாலைகளில் கட்டடங்களுக்குத் தேவையான உபகரணப் பொருள்களான மணல், செங்கல், ஜல்லி, எம். சாண்ட் போன்றவைகள் குவிக்கப்பட்டு விற்பனையும் நடைபெற்று வருகிறது. இதனால் மலைச்சாலைகளில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்படுகிறது. நகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்காமல் இருந்து வருகின்றனா். இது குறித்து கொடைக்கானல் நகரமைப்பு அலுவலா் நாசா் கூறுகையில் கொடைக்கானல் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சாலைகளை ஆக்கிரமித்தும் பேருந்து நிறுத்தங்களை ஆக்கிரமித்தும் கடைகள் வைத்துள்ளவா்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com