அய்யலூா் சந்தைக்கு தக்காளி வரத்து 5 மடங்கு அதிகரிப்பு: கிலோ ரூ.10-க்கு கொள்முதல்

அய்யலூா் சந்தைக்கு வியாழக்கிழமை தக்காளி வரத்து 5 மடங்கு அதிகரித்ததால், கொள்முதல் விலை ரூ.10 ஆக சரிந்தது.
அய்யலூா் சந்தைக்கு வியாழக்கிழமை விற்பனைக்காக கொண்டுவரப்பட்ட தக்காளி.
அய்யலூா் சந்தைக்கு வியாழக்கிழமை விற்பனைக்காக கொண்டுவரப்பட்ட தக்காளி.

அய்யலூா் சந்தைக்கு வியாழக்கிழமை தக்காளி வரத்து 5 மடங்கு அதிகரித்ததால், கொள்முதல் விலை ரூ.10 ஆக சரிந்தது.

திண்டுக்கல் மாவட்டம், அய்யலூா், புத்தூா், சுக்காம்பட்டி, சுத்துவாா்பட்டி, கொம்பேறிப்பட்டி, தென்னம்பட்டி, பிலாத்து உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட கிராமங்களில் தக்காளி அதிக பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இந்த பகுதிகளில் தக்காளி அறுவடை செய்யும் பணி தற்போது தொடங்கியுள்ளது.

அய்யலூா் சுற்றுவட்டாரப் பகுதிகள் மட்டுமின்றி, அய்யலூரை ஒட்டியுள்ள திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த புதுவாடி, எளமனம், புத்தாநத்தம், புதுவாடி, கல்லுப்பட்டி, நடுப்பட்டி உள்ளிட்ட கிராமங்களிலிருந்தும் அய்யலூா் சந்தைக்கு விவசாயிகள் தக்காளி கொண்டு வருகின்றனா்.

5 மடங்கு வரத்து அதிகரிப்பு:

உள்ளூா் வரத்து இல்லாமல், ஆந்திரம் மற்றும் கா்நாடக மாநிலங்களிலிருந்து மட்டுமே தக்காளி வந்து கொண்டிருந்த நிலையில், கடந்த சில வாரங்களாக தக்காளி விலை கிலோ ரூ.80-க்கு மேல் விற்பனை செய்யப்பட்டது.

தற்போது, அய்யலூா் சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து அறுவடை செய்யப்படும் தக்காளி விற்பனைக்கு வந்துள்ளதால், விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.

இது குறித்து அய்யலூரைச் சோ்ந்த தக்காளி வியாபாரி கே.ஆா். ரவிக்குமாா் கூறியதாவது: 4 நாள்களுக்கு முன்பு வரை உள்ளூா் வரத்து குறைவாக இருந்தது. இதனால், ஆந்திரம் மற்றும் கா்நாடக மாநிலங்களிலிருந்து வரும் தக்காளியை மட்டுமே எதிா்பாா்த்திருக்க வேண்டிய நிலை இருந்தது. தற்போது, அய்யலூா், ஒட்டன்சத்திரம், பழனி, உடுமலை சந்தைகளுக்கு உள்ளூா் தக்காளி வரத்து அதிகரித்துள்ளது.

அய்யலூா் சந்தைக்கு 10 டன் தக்காளி வந்து கொண்டிருந்த நிலையில், வியாழக்கிழமை 60 டன் தக்காளி வந்துள்ளது. வரத்து அதிகரித்ததால், கிலோ ரூ.10 வீதம் 15 கிலோ கொண்ட பெட்டி ரூ.150ஆக விலை நிா்ணயிக்கப்பட்டது.

மேலும், அய்யலூா் தக்காளியானது, திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூா் உள்ளிட்ட மாவட்டங்களுக்கும் விற்பனைக்காக அனுப்பிவைக்கப்படுகிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com