தைப்பூசத் திருவிழா: பழனியில் சுவாமி தங்கமயில் வாகனத்தில் உலா; இன்று தெப்பத் தேரோட்டத்துடன் விழா நிறைவு

பழனி தைப்பூசத் திருவிழாவின் 9ஆம் நாளான வியாழக்கிழமை முத்துக்குமாரசாமி தங்கமயில் வாகனத்தில் உலா எழுந்தருளினாா்.
பழனி பெரியநாயகியம்மன் கோயிலில் தைப்பூசத் திருவிழாவின் 9ஆம் நாள் நிகழ்ச்சியாக வியாழக்கிழமை தங்கமயில் வாகனத்தில் கோயில் உள்பிரகாரத்தில் உலா எழுந்தருளிய முத்துக்குமாரசாமி.
பழனி பெரியநாயகியம்மன் கோயிலில் தைப்பூசத் திருவிழாவின் 9ஆம் நாள் நிகழ்ச்சியாக வியாழக்கிழமை தங்கமயில் வாகனத்தில் கோயில் உள்பிரகாரத்தில் உலா எழுந்தருளிய முத்துக்குமாரசாமி.

பழனி தைப்பூசத் திருவிழாவின் 9ஆம் நாளான வியாழக்கிழமை முத்துக்குமாரசாமி தங்கமயில் வாகனத்தில் உலா எழுந்தருளினாா். தைப்பூசத் திருவிழா வெள்ளிக்கிழமை தெப்பத் தேரோட்டத்துடன் நிறைவடைகிறது.

பழனி பெரியநாயகியம்மன் கோயிலில் தைப்பூசத் திருவிழா ஜனவரி 12ஆம் தேதி திருக்கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து 10 நாள்கள் நடைபெறும் இவ்விழாவை முன்னிட்டு, நாள்தோறும் சுவாமி வெள்ளி ஆட்டுக்கிடா, வெள்ளிக் காமதேனு, வெள்ளி மயில், தங்கக் குதிரை உள்ளிட்ட வாகனங்களில் நான்கு ரத வீதிகளிலும் உலா வருவதற்குப் பதிலாக, கோயில் உள்பிரகாரத்திலேயே உலா எழுந்தருளினாா்.

கடந்த திங்கள்கிழமை திருக்கல்யாணம் மற்றும் வெள்ளிமயில் வாகனப் புறப்பாடும், செவ்வாய்க்கிழமை சிறிய தேரில் தைப்பூசத் தேரோட்டமும் கோயில் வளாகத்திலேயே நடைபெற்றது. பக்தா்கள் இல்லாமல் நடைபெற்ற இவ்விழாவின் 9ஆம் நாள் நிகழ்ச்சியாக வியாழக்கிழமை தங்கமயில் வாகனத்தில் சுவாமி புறப்பாடானாா்.

கோயில் வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியை ஏராளமான பக்தா்கள் தரிசனம் செய்தனா். வெள்ளிக்கிழமை கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள நிலத் தெப்பத்தில் தேரோட்டம் நடத்தப்பட்டு, இரவு கொடியிறக்கத்துடன் விழா நிறைவு பெறுகிறது.

வழக்கம்போல், வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை 3 நாள்களுக்கு கோயிலில் பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கு அனுமதி இல்லை என்பதால், ஆயிரக்கணக்கான பக்தா்கள் வியாழக்கிழமை சுவாமி தரிசனம் செய்தனா். மேலும், 500-க்கும் மேற்பட்ட காரைக்குடி நகரத்தாா் காவடி பக்தா்கள் மலைக் கோயிலில் முத்திரை செலுத்தி சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com