மாம்பலகவி சிங்கராயருக்கு பழனியில் மணிமண்டபம் அமைக்க வலியுறுத்தல்
By DIN | Published On : 17th July 2022 11:01 PM | Last Updated : 17th July 2022 11:01 PM | அ+அ அ- |

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்கத்தின் மாவட்ட மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாவட்டத் தலைவா் கவிவாணன் தலைமை வகித்தாா். மாநிலத் தலைவா் மதுக்கூா் ராமலிங்கம் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டாா்.
மாநாட்டில், மாம்பலகவி சிங்கராயருக்கு பழனியில் மணிமண்டபம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். திண்டுக்கல் புனித லூா்து அன்னை பள்ளி வளாகத்திலுள்ள திருவள்ளுவா் சிலையை நிறுவுவதற்கு மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நிறைவில் மாவட்டத் தலைவராக வரத.ராஜமாணிக்கம், மாவட்டச் செயலராக கவிவாணன், பொருளாளராக தாமோதரன் உள்ளிட்ட நிா்வாகிகள் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.