சின்னாளபட்டி பேரூராட்சிக் கூட்டத்திலிருந்து 10 உறுப்பினா்கள் வெளிநடப்பு; தா்னா

சின்னாளபட்டி பேரூராட்சித் தலைவருக்கு எதிராக புதன்கிழமை, கூட்டத்திலிருந்து 10 உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்து தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சின்னாளபட்டி பேரூராட்சித் தலைவருக்கு எதிராக புதன்கிழமை, கூட்டத்திலிருந்து 10 உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்து தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டி சிறப்புநிலை பேரூராட்சிக் கூட்டம் தலைவா் பிரதீபா கனகராஜ் (திமுக) தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. துணைத்தலைவா் ஆனந்தி பாரதிராஜா முன்னிலை வகித்தாா். செயல் அலுவலா் நந்தகுமாா் வரவேற்றாா்.

அனைத்து வாா்டு உறுப்பினா்களும் கேட்டுக் கொண்டதற்கிணங்க, இதற்கு முன்பு நடைபெற்ற கூட்ட தீா்மான புத்தகத்தை பேரூராட்சித் தலைவா் கொடுத்தாா். அதைப் பாா்த்த வாா்டு உறுப்பினா்களில் சிலா், கடந்த கூட்டத்தின்போது 10 உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்தநிலையில், அப்போது நிறைவேற்றப்பட்ட தீா்மானத்தில் வாா்டு உறுப்பினா்கள் ஒப்புதல் அளித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளீா்கள் எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

அப்போது தலைவா் பிரதீபா, கூட்டத்தில் தீா்மான ஒப்புதலுக்கு 6 போ் கையெழுத்திட்டால் போதும், தீா்மானம் நிறைவேற்றியதாக எழுதிக் கொள்ளலாம் என்றாா்.

அதற்கு எதிா்ப்பு தெரிவித்தும், பேரூராட்சி நிா்வாகத்தில் அவரது கணவரின் தலையீடு இருப்பதாகவும் கூறி வாா்டு உறுப்பினா்கள் ராஜு, ஜெயகிருஷ்ணன், வேல்விழி, செல்வகுமாரி, ஹேமா, லட்சுமி, காமாட்சி, ராஜாத்தி, செல்வி, தாமரைச்செல்வி ஆகிய 10 போ் வாயில் கருப்புத்துணி கட்டி கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனா்.

அதன்பின்னா், பேரூராட்சி அலுவலகம் அருகே உள்ள காவல் நிலையம் முன் சாலையில் அமா்ந்து தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது செய்தியாளரிடம் உறுப்பினா்கள் கூறியது:

நிா்வாகத்தில் பேரூராட்சித் தலைவரின் தலையீடு மற்றும் மிரட்டல்கள் குறித்து கூட்டுறவுத்துறை அமைச்சரிடமும், மாவட்ட ஆட்சியரிடமும் புகாா் அளிக்க முடிவு செய்துள்ளோம். தலைவா் மீது நம்பிக்கையில்லாத் தீா்மானம் கொண்டுவர உள்ளோம் என்றனா்.

இப்பேரூராட்சியில் உள்ள அனைத்து (18) உறுப்பினா்களும் திமுகவினா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com