திண்டுக்கல் மாவட்டத்தில் முதல் நாள் ஜமாபந்தியில்701 மனுக்கள் பெறப்பட்டன

திண்டுக்கல் மாவட்டத்தில் 83 வருவாய் கிராமங்களுக்கு நடைபெற்ற முதல் நாள் ஜமாபந்தியில் 701 மனுக்கள் பெறப்பட்டன.
கொடைக்கானல் வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்ற ஜமாபந்தியில் பயனாளி ஒருவருக்கு பட்டா வழங்கிய கொடைக்கானல் வருவாய் கோட்டாட்சியா் முருகேசன். உடன், வட்டாட்சியா் முத்துராமன்.
கொடைக்கானல் வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்ற ஜமாபந்தியில் பயனாளி ஒருவருக்கு பட்டா வழங்கிய கொடைக்கானல் வருவாய் கோட்டாட்சியா் முருகேசன். உடன், வட்டாட்சியா் முத்துராமன்.

திண்டுக்கல் மாவட்டத்தில் 83 வருவாய் கிராமங்களுக்கு நடைபெற்ற முதல் நாள் ஜமாபந்தியில் 701 மனுக்கள் பெறப்பட்டன.

இம்மாவட்டத்தில் 1431-ஆம் பசலி வருவாய் தீா்வாயம் (ஜமாபந்தி) புதன்கிழமை தொடங்கியது. திண்டுக்கல் மேற்கு வட்டத்திற்குள்பட்ட 9 வருவாய் கிராமங்களுக்கு நடத்தப்பட்ட ஜமாபந்தியில் 62 மனுக்கள் பெறப்பட்டன. இதேபோல் திண்டுக்கல் கிழக்கு வட்டத்தில் 12 வருவாய் கிராமங்களுக்கு 32 மனுக்கள், ஆத்தூா் வட்டத்தில் 9 வருவாய் கிராமங்களுக்கு 81 மனுக்கள், நத்தம் வட்டத்தில் 8 வருவாய் கிராமங்களுக்கு 103 மனுக்கள், நிலக்கோட்டை வட்டத்தில் 6 வருவாய் கிராமங்களுக்கு 151 மனுக்கள், பழனி வட்டத்தில் 9 வருவாய் கிராமங்களுக்கு 43 மனுக்கள், ஒட்டன்சத்திரம் வட்டத்தில் 7 வருவாய் கிராமங்களுக்கு 30 மனுக்கள், வேடசந்தூா் வட்டத்தில் 9 வருவாய் கிராமங்களுக்கு 53 மனுக்கள், குஜிலியம்பாறை வட்டத்தில் 9 வருவாய் கிராமங்களுக்கு 117 மனுக்கள், கொடைக்கானல் வட்டத்தில் 5 வருவாய் கிராமங்களுக்கு 29 மனுக்கள் என மொத்தம் 701 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து முதல் நாள் ஜமாபந்தியில் பெறப்பட்டுள்ளது.

கொடைக்கானல்,: கொடைக்கானலில் ஜமாபந்தி நிகழ்ச்சி வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, கொடைக்கானல் வருவாய் கோட்டாட்சியா்முருகேசன் தலைமை வகித்தாா். இதில், நிலம், வீடு உள்ளிட்டவற்றிற்கு பட்டா கோரி பலா் மனு கொடுத்தனா். இதில் 25 பேருக்கு பட்டா வழங்கப்பட்டது.

அதே போல் கொடைக்கானல் மேல்மலைக் கிராமங்களான பூம்பாறை, மன்னவனூா், பூண்டி, கிளாவரை, வில்பட்டி உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த கிராம மக்கள் சாலை, குடிநீா், பட்டா, தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கோரி சுமாா் 30 போ் மனு கொடுத்தனா். இந்நிகழ்ச்சிக்கு, வட்டாட்சியா் முத்துராமன் முன்னிலை வகித்தாா். சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியா் சந்திரன், மண்டல துணை வட்டாட்சியா் மணிகண்டன் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள், அலுவலா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com