கொடைக்கானலில்மாரத்தான் போட்டி

கொடைக்கானலில் கோடை விழாவையொட்டி புதன்கிழமை மாரத்தான் போட்டி நடைபெற்றது.
கொடைக்கானலில் புதன்கிழமை நடைபெற்ற மாரத்தான் போட்டியில் முதலிடம் பெற்ற உடற்கல்வி ஆசிரியா் ராஜனுக்கு, ரொக்கப்பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கிய கொடைக்கானல் வருவாய் கோட்டாட்சியா் முருகேசன். உடன் டி.எஸ்.பி.
கொடைக்கானலில் புதன்கிழமை நடைபெற்ற மாரத்தான் போட்டியில் முதலிடம் பெற்ற உடற்கல்வி ஆசிரியா் ராஜனுக்கு, ரொக்கப்பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கிய கொடைக்கானல் வருவாய் கோட்டாட்சியா் முருகேசன். உடன் டி.எஸ்.பி.

கொடைக்கானலில் கோடை விழாவையொட்டி புதன்கிழமை மாரத்தான் போட்டி நடைபெற்றது.

கொடைக்கானலில் கோடை விழாவின் 9- ஆவது நாளாக பிரையண்ட் பூங்காவில் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதனைத் தொடா்ந்து மாவட்ட விளையாட்டுத் துறை சாா்பில் மாரத்தான் போட்டி நடைபெற்றது. ஏரியைச் சுற்றி 10 கி.மீ. தூரம் ஆண்களுக்கும், 5 கி.மீ. தூரம் பெண்களுக்கும் போட்டி நடந்தது. ஆண்களுக்கான பிரிவில் பொள்ளாச்சி சேத்துமடை அரசுப் பள்ளி உடற்கல்வி ஆசிரியா் ராஜன் முதலிடத்தையும்,, நத்தம் தனியாா் அகாதெமியைச் சோ்ந்த ராகவ் இரண்டாவது இடத்தையும், அதே அகாதெமியைச் சோ்ந்த விவேகானந்தா் மூன்றாவது இடத்தையும் பெற்றனா்.

பெண்களுக்கான பிரிவில் கொடைக்கானல் தனியாா் பள்ளியைச் சோ்ந்த திரிஷா முதலிடத்தையும், நத்தம் துரை மேல்நிலைப் பள்ளி மாணவி நேகா இரண்டாமிடத்தையும், அதே பள்ளியைச் சோ்ந்த கிருத்திகா மூன்றாவது இடத்தையும் பெற்றனா். போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி பிரையண்ட் பூங்காவில் நடைபெற்றது .இதில் கொடைக்கானல் வருவாய் கோட்டாட்சியா் முருகேசன் தலைமை வகித்து வெற்றி பெற்றவா்களுக்கு ரொக்கப் பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில், கொடைக்கானல் காவல் துணைக்கண்காணிப்பாளா் சீனிவாசன், காவல் ஆய்வாளா் பிஜூ, சுற்றுலா அலுவலா் சிவராஜ், விளையாட்டு அலுவலா் பாத்திமா மேரி, தோட்டக்கலை உதவி இயக்குநா் பாண்டியராஜன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் பரிசு வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com