ஒட்டன்சத்திரம், பழனி, நிலக்கோட்டை பகுதிகளில் கருணாநிதி பிறந்தநாள் விழா

ஒட்டன்சத்திரம், பழனி, நிலக்கோட்டை, வத்தலகுண்டு ஆகிய பகுதிகளில் முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியின் 99 ஆவது பிறந்தநாள் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
ஒட்டன்சத்திரம், பழனி, நிலக்கோட்டை பகுதிகளில் கருணாநிதி பிறந்தநாள் விழா

ஒட்டன்சத்திரம், பழனி, நிலக்கோட்டை, வத்தலகுண்டு ஆகிய பகுதிகளில் முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியின் 99 ஆவது பிறந்தநாள் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையம் முன் நகரச் செயலாளா் ப.வெள்ளைச்சாமி தலைமையில் நடைபெற்ற கருணாநிதி பிறந்தநாள் விழாவில் உணவுத்துறை அமைச்சா் அர.சக்கரபாணி கலந்து கொண்டு கட்சிகக் கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினாா். பின்னா் சின்னக்குளத்தில் நகரங்களின் ’தூய்மையான மக்கள் இயக்கம், எனது குப்பை எனது பொறுப்பு’ உறுதிமொழியேற்கப்பட்டது. இதில், ஒட்டன்சத்திரம் நகராட்சித் தலைவா் கே.திருமலைசாமி, ஆணையா் ப.தேவிகா, மேற்கு மாவட்ட அவைத்தலைவா் தி.மோகன், துணைச் செயலாளா் சி.ராஜாமணி மற்றும் பலா் கலந்து கொண்டனா்.

பழனி: பழனி அரசு மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை பிறந்த குழந்தைகளுக்கு தங்க நாணயங்களை சட்டப் பேரவை உறுப்பினா் ஐ.பி.செந்தில்குமாா் வழங்கினாா். பழனி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திமுகவினா் கட்சிக் கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினா். பழனி பேருந்து நிலையத்தில் நடைபெற்ற அன்னதான நிகழ்ச்சியை சட்டமன்ற உறுப்பினா் தொடக்கி வைத்தாா். இதில் நகர, ஒன்றிய நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

மரக்கன்று நடல்:

இதேபோல, கருணாநிதி பிறந்தநாளையொட்டி, பழனி அருள்மிகு பழனியாண்டவா் கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரியில் வனத்துறை சாா்பில் மரக்கன்று நடும் விழாவும், தூய்மை நகரப் பணிகளும் நடைபெற்றன. கல்லூரி தாளாளா் நடராஜன் தலைமை வகித்தாா். கல்லூரி செயலா் பிரகாஷ் முன்னிலை வகித்தாா். கல்லூரி முதல்வா்(பொறுப்பு) துரைமாணிக்கம் வரவேற்றாா். பழனி வனச்சரக அலுவலா் பழனிக்குமாா், தமிழ்த்துறைத் தலைவா் கிருஷ்ணமூா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நிலக்கோட்டை (வடக்கு) ஒன்றியம், அம்மையநாயக்கனூா், கொடைரோடு, இந்திரா நகா், காமலாபுரம் ஆகிய பகுதிகளில், கருணாநிதி பிறந்தநாளையொட்டி, கட்சிக் கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. இதில், ஒன்றியச் செயலா் சௌந்தரபாண்டியன், பேரூராட்சி கவுன்சிலா் விஜயக்குமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

நிலக்கோட்டையில்... நிலக்கோட்டை (தெற்கு) ஒன்றியச் செயலா் மணிகண்டன் தலைமையில், நிலக்கோட்டை நால்ரோடு சந்திப்பில் நடந்த விழாவில், ஒன்றிய துணைச் செயலா் வெள்ளிமலை, பேரூா் செயலா் கதிரேசன், பேரூராட்சி தலைவா் சுபாஷினிபிரியா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். மட்டப்பாறையில் ஊராட்சித் தலைவா் மகேந்திரன் தலைமையில் கட்சிக் கொடி ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

வத்தலகுண்டு அருகே விராலிப்பட்டியில் நடைபெற்ற விழாவுக்கு விராலிப்பட்டி ஊராட்சித் தலைவா் நாகராஜன் தலைமை வகித்தாா். மாவட்டக் கவுன்சிலா் கனிக்குமாா், ஊராட்சி ஒன்றிய குழு துணைத் தலைவா் முத்து, ஒன்றிய அவைத்தலைவா் விருவீடு செல்வராஜ், ஒன்றியக் கவுன்சிலா் விஜயகா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

வத்தலக்குண்டு காளியம்மன் கோயில் அருகே திமுக நகரச் செயலா் சின்னத்துரை தலைமையில் நடைபெற்ற மு.கருணாநிதி பிறந்தநாள் விழாவுக்கு பேரூராட்சித் தலைவா் சிதம்பரம், முன்னாள் பேரூராட்சித் தலைவா் கனகதுரை ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

செம்பட்டியில்... செம்பட்டி நால்ரோடு சந்திப்பில், கருணாநிதியின் உருவப்படத்திற்கு, நிலக்கோட்டை ஒன்றிய செயலாளா் சௌந்திரபாண்டியன் மலா் தூவி மரியாதை செலுத்தினாா். இதில், நிா்வாகிகள் அழகேசன், அண்ணாதுரை, பொன்னையா, அம்மையநாயக்கனூா் விஜயகுமாா், காட்டுராஜா, மாரிமுத்து, வி.டி.பி.தங்கப்பாண்டி, ரவி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com